கொரோனா மட்டுமல்ல... பருவ நிலை மாற்றமும் சவால்தான்... எச்சரிக்கும் ஜோ பிடன்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்று வைரஸை போல் பருவ நிலை மாற்றமும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடன் தெரிவித்தார்.
தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 2016-ல் பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து 2016-ல் விலகிய நிலையில், ஜோ பிடன் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த மீண்டும் உறுதியாக உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றார். அவர் ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். துணை அதிபராக இந்தியா வம்சாவளி, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கிறார்.
கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது, அமெரிக்க பொருளாதாரத்தை சீர் செய்வது உள்ளிட்ட சில அவசர திட்டங்களை செயல்படுத்த பிடன் அரசு முடிவு செய்துள்ளது.
2016-ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்மின் அமெரிக்க அரசு கருத்து வேறுபாடு காரணமாக விலகியது. ஆனால் ஜோ பைடன் அரசு அந்த ஒப்பந்தத்தில் மீண்டும்இணைய முடிவெடுத்து அதற்கான அதிகாரிகளை நியமித்து வருகிறார்.பருவநிலை ஒப்பந்தத்திற்கு இன்னும் அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் ஜோ பைடன் இதில் உறுதியாக உள்ளார்
டெல்வரில் மாகாணத்தில் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க செயற்குழு அதிகாரிகளை ஜோ பிடன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-பருவ நிலை ஒப்பந்தம் மற்றும் சுகாதார பேரழிவுகள் ஒரே நேரத்தில் அமெரிக்காவில் மோதுகின்றன. தொற்றுநோய் மட்டும் மக்களை முடக்கி வைக்கவில்லை.பருவ நிலை மாற்றம் காரணமாக மோசமான காற்றின் தரமும் மக்களை முடக்குகிறது.
நாம் எல்லோரும் நெருக்கடியில் இருக்கிறோம். கொரோனாவுக்கு ஒரு ஒருங்கிணைந்த தேசிய திட்டம் தேவைப்படுவது போல, காலநிலை மாற்ற சவாலை எதிர்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் தேவை. ஏனெனில் பருவ நிலை மாற்றம் இந்த காலத்தில் மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று ஜோ பிடன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications