ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.. இருண்ட தருணம்.. வன்முறை குறித்து ஜோ பிடன் விமர்சனம்
வாஷிங்டன்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த வன்முறை குறித்து ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த வன்முறைக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அது போல் ஜோ பிடன், கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் போரிஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து அமெரிக்க அதிபராக பதவியேற்க போகும் ஜோ பிடன் கூறுகையில் நாடாளுமன்ற முற்றுகையை நிறுத்தக்கோரி தொலைகாட்சி மூலம் தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் பேச வேண்டும். இதன் மூலம் அவர் பதவிப்பிரமாண உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். இந்த தேசத்தை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இத்தனை காலமாக கலங்கரை விளக்கமாக இருந்த ஜனநாயகம் தற்போது இருண்டு போய்விட்டது.
எனக்கு மிகவும் தெளிவாக தெரிகிறது. கேபிட்டல் கட்டடத்தில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை சொல்லி தெரிய தேவையில்லை. இந்த வன்முறையில் சட்டத்திற்கு சிறிய எண்ணிக்கையிலான விரோதிகள் கலந்து கொண்டுள்ளார்கள். இது கருத்து வேறுபாடு அல்ல, தேசத் துரோகத்தின் எல்லையாகும். இது இப்போதே முடிவடைய வேண்டும் என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
அது போல் இந்த வன்முறை குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறுகையில் கேபிட்டலில் நடந்த வன்முறையை ஜோபிடனுடன் இணைந்து நானும் கண்டிக்கிறேன். அவர் கூறியது போல் ஜனநாயகம் தன் பணியை செய்ய விடுங்கள் என்றார்.
இந்த வன்முறை குறித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறுகையில் கேபிட்டல் கட்டடத்தில் நிகழ்ந்த வன்முறையை வரலாறு மறக்காது. அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை டிரம்ப் முன்வைத்து வருகிறார். இது நமது தேசத்திற்கு அவமானம். திட்டமிட்டு தூண்டப்பட்ட வன்முறை இது என ஒபாமா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில் உலகம் முழுவதும் அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்ற பிம்பமே உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயிலாகும். நேற்று இரவு நடந்த சம்பவங்களை பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications