நடக்க முடியாமல் தடுமாறிய அமெரிக்க அதிபர்.. மனைவியால் தப்பிய ஜோ பைடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பீச்சில் நடக்க முடியாமல் தவித்தார். கால்தவறி கீழே விழும் நிலைக்கு சென்ற நிலையில் பக்கத்தில் இருந்த அவரது மனைவி ஜில் பைடன் அவருக்கு உதவி செய்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார்.

கடந்த 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அதன்பிறகு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அதுவரை ஜோ பைடன் தான் அதிபராக தொடர உள்ளார். முன்னதாக இந்த தேர்தலில் ஜோ பைடன் தான் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட தயாரானார்.
ஆனால் அவருக்கு 81 வயது ஆனது மற்றும் உடல்நல குறைபாடு உள்ளிட்டவற்றால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் விலகியதை தொடர்ந்து தான் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்பிடம் தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில் தான் அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் டெல்வாரில் பீச்சில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். அதன்பிறகு அவர்கள் அங்குள்ள ரெகோபாத் பீச்சில் நேரம் செலவிட்டனர். ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் பீச்சில் நேற்று நடந்து சென்றார்.
அப்போது ஜோ பைடனால் பீச் மணலில் நடந்து செல்ல முடியவில்லை. அவர் நிலைத்தடுமாறினார். இதை கவனித்த ஜில் பைடன் அவரது கையை தாங்கிப்பிடித்தார். இதனால் ஜோ பைடன் கீழே விழாமல் தப்பித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பலரும் ஜோ பைடன் தவறி விழப்போனதை நினைத்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஜோ பைடன் விரைவில் டொனால்ட் டிரம்பிடம் அதிபர் பதவியை ஒப்படைக்க உள்ளார். இதையொட்டி முதற்கட்டமாக நாளை மறுநாள் (நவம்பர் 13ம் தேதி) டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். அரசியலில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில் அவர்களின் சந்திப்பு என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications