நான் மீண்டும் சொல்கிறேன்.. அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.. புதினுக்கு ஜோ பிடன் வார்னிங்!
வாஷிங்டன்: உக்ரைன் மீது போர் தொடுத்தால் அதற்காக பெரிய விலையை ரஷ்யா கொடுக்க நேரிடும் என்றும் பொருளாதார பேரழிவை சந்திக்கும் என்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பின் இரண்டாவது மிகப் பெரிய நாடுகளில் உக்ரைன் உள்ளது. சோவியத் ஒன்றியம் பிரிந்த போது பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. அண்டைநாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.
உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை கடந்த 2014ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து உக்ரைனை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

ரஷ்ய படைகள்
இதற்காக உக்ரைன் எல்லைகளில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. போரிட்டாவது உக்ரைனை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இதை அறிந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடந்த இரு வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் அழைத்து பேசினார்.

உரையாடல்
சுமார் 2 மணி நேரம் பேசிய இந்த உரையாடலில் உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணத்தை கைவிடுமாறும், அதற்கு பதில் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் கூறியிருந்தார். மேலும் ஒரு வேளை உக்ரைன் மீது ரஷ்யா போரிட நேரிட்டால் உலக நாடுகள் மத்தியில் ரஷ்யாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும். உலக நாடுகள் தவறாக நினைக்கக் கூடும் என அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர்
இந்தநிலையில் மீண்டும் ஒரு முறை ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜோ பிடன் கூறுகையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அமெரிக்கா துருப்புகளை அனுப்புவதற்கான சாத்தியம் இல்லை. எனினும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் தேவையான படைகள் தேவைப்பட்டால் அனுப்ப வேண்டியிருக்கும்.

ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைனுடன் போரிட்டால் அதற்காக ரஷ்ய அதிபர் புதின் பெரிய விலையை கொடுக்க நேரிடும். மற்ற நாடுகள் பொருளாதார தடை விதிக்க நேரிடும். இது ரஷ்யாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்றார் ஜோ பிடன். கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யாவை உக்ரைன் கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளது.

தலைவலி ரஷ்யா
அந்த ட்வீட்டில் சைனஸால் ஏற்படும் தலைவலி, ரத்த கொதிப்பால் ஏற்படும் தலைவலி, மனஉளைச்சலால் ஏற்படும் தலைவலி எல்லாம் எப்படியிருக்கும் என விவரித்த உக்ரைன், இந்த தலைவலியெல்லாம் தலையில் எங்கோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வலியை கொடுக்கும். ஆனால் ரஷ்யாவுக்கு அருகே வசித்தால் தலை முழுவதும் குடைச்சலை கொடுக்கும் என்ற அளவுக்கு நகைச்சுவையாக ட்வீட் போடப்பட்டுள்ளது. ரண களத்திலும் ஒரு குதூகலம்!
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications