நேரமே சரியில்லை.. வீட்டுக்கு போக வேண்டியதுதான்.. டிரம்பை அலற விட்ட அமெரிக்க "ஜோசியர்"!
வாஷிங்டன்: சான்ஸே இல்லையாம்.. டிரம்ப் இதோட வீட்டுக்கு போக வேண்டியதானாம்.. அடித்து சொல்லிட்டார் அமெரிக்க ஜோசியர் ஸாரி பேராசிரியர் ஒருவர்!
உலகமே அதிபர் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது.. இந்த தேர்தலுக்காகத்தான் டிரம்ப் படாதபாடு பட்டு வருகிறார்.. கொரோனாவால் கொத்து கொத்தாக விழுந்தாலும் சரி, இந்த தேர்தலில் எப்படியாவது ஜெயித்தே விடுவது என்பதுதான் அவரது இந்த 5 மாத பிடிவாதமாக உள்ளது.
இதற்காக பல்வேறு அதிருப்திகளையும் அவர் சந்தித்து வருகிறார்.. இருந்தாலும், தன் தரப்பு சர்ச்சைகளையும் மறக்காமல் அடிக்கடி வெளியிட்டு அதன்மூலம் பரபரப்பையும் தக்க வைத்து கொண்டு வருகிறார்.. வரும் நவம்பர் மாசம் தேர்தல் வரப்போகிறது.. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆவல் எல்லார் மனசிலும் எழுந்துள்ளது.

அதிபர் தேர்தல்
குறிப்பாக டிரம்ப் எப்படியும் இந்த முறை வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பதுதான் பரவலான கருத்து.. இதற்கு காரணம், அவர் அடிக்கடி "திருவாய் மலர்வதும்", வைரஸ் விவகாரத்தில் கையாண்ட விதமும், ஜார்ஜ் மரணம் கிளப்பிய நிறவெறி போராட்டமும்.. என நாலாபக்கமும் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டு உட்கார்ந்துள்ளார்.

பேராசிரியர்
இந்நிலையில், சத்தியமாக அடுத்த முறை அதிபராக டிரம்ப் வரவே முடியாது என்று ஒரு பேராசிரியர் கணித்தும், அடித்தும் சொல்கிறார்.. அவர் பெயர் அலன் லிச்ட்மேன்.. அமெரிக்க பல்கலை கழக பேராசிரியர்.. 2016 -ம் ஆண்டு அதிபராக டிரம்ப்தான் வருவார் என்று அறுதியிட்டு சொன்னது இவர்தான்.. ரீகன் தான் வெற்றி பெறுவார் என சரியாக கணித்திருந்தார்.. அப்போது மட்டுமல்ல, 1984-ம் ஆண்டு முதலே அடுத்த அதிபர் யார் என்பதை இவர் சரியாக கணித்து வருகிறார்... அது அப்படியே பலித்தும் வருகிறது.

ஜார்ஜ் புஷ்
ஒரே ஒருமுறை அதாவது 2000வது ஆண்டு கணிப்பு மட்டுமே இவர் கணிப்பு தப்பாக போய்விட்டது.. அதாவது அந்த ஆண்டு அல் கோர் வெற்றி பெறுவார் என்று சொன்னார், ஆனால் ஜார்ஜ் புஷ் ஜெயித்துவிட்டார்.. மத்தபடி இவர் சொன்னது எல்லாமே அப்படி அப்படியே நடந்து வருகிறது.. அதனால் அமெரிக்கா முழுக்க இந்த பேராசிரியர் என்றாலே கொஞ்சம் ஃபேமஸ்.

மனநிலை
இந்த முறை டிரம்ப் தோல்வியடைவார் என்று அவரே இப்போது சொல்லி உள்ளார்.. அதுமட்டுமில்லை.. ஜோ பிடன் தான் இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்றும் சொல்கிறார்.. நாட்டில் நிலவும் பொருளாதார நிலை, மக்களிடம் உள்ள மனநிலை, சமூக அளவில் உள்ள பதற்ற நிலை, ஊழல், வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு உட்பட 13 அம்சங்கள் அடிப்படையில் இவர் கணித்து வருகிறார்.
அதனால் இந்த முறை டிரம்ப்புக்கு சான்ஸே இல்லையாம்.. அதனால் டிரம்பை வெளியேற்றவும் அமெரிக்க மக்கள் ரெடியாகி வருகின்றனர்!
-
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications