வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி.. 6 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ஆர்ச்சர்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் 6 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் முடிவுகளை கணித்துள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பழைய ட்வீட்டுகள் எப்போதும் பரபரப்பான சம்பவங்கள் நடந்தாலும் அதனுடன் ஒத்துப்போகும்படியாகவே அவரது ட்வீட்டுகள் இருக்கும்.

இதனால் ஆர்ச்சரை அஸ்ட்ராலஜர் என்றே அழைப்பர். எந்த ஒரு நிகழ்வையும் முன்பே கணித்து ட்வீட் போடுவது போல் இவரது வார்த்தைகள் அமைந்திருக்கும்.

3வது கட்ட கொரோனா தடுப்பூசி டிரையல் 90% வெற்றி! 3வது கட்ட கொரோனா தடுப்பூசி டிரையல் 90% வெற்றி!

ஆர்ச்சர்

ஆர்ச்சர்

ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே வீரர் ரெய்னா திடீரென அணியிலிருந்து விலகி இந்தியா திரும்பினார். இந்த நிகழ்வும் ஆர்ச்சரின் கணிப்பில் தவறாமல் இருந்தது. தற்போது உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலிலும் ஆர்ச்சர் கருத்து கூறுவதை விட்டு வைக்கவில்லை.

தீர்க்கதரிசி ஆர்ச்சர்

தீர்க்கதரிசி ஆர்ச்சர்

கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோ என போட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. ஜோப்ரா சைக்கிள் கேப்பில் எதையாவது சொல்லி வைத்தால் அது வைரலாகி வருகிறது. தற்போது இந்த ஜோ விவகாரத்தையும் ரசிகர்கள் ஆர்ச்சரை தீர்க்கதரிசி என கொண்டாடி வருகிறார்கள்.

வலிமை பட அப்டேட்

வலிமை பட அப்டேட்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோபிடன் 270 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றார். இது போல் ஆர்ச்சர் சில அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிவிப்பதால் அவரிடம் அஜித்தின் வலிமை படம் குறித்த அப்டேட்டை கொடுக்குமாறு ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார்.

நிறைய விஷயங்கள்

நிறைய விஷயங்கள்

இவர் அனைவராலும் ஜோதிடர் என்றே அழைக்கப்படுகிறார். ஆனால் இவரோ மனதிற்கு தோன்றும் கருத்தை தான் போடுவதாகவும் அது உண்மை சம்பவத்துடன் ஒத்து போகிறது என்றார். இன்னும் இவரிடம் ரசிகர்கள் நிறைய விஷயங்களை கணித்து சொல்லுமாறு கூறி வருகிறார்கள்.

English summary
England fast boewler Jofra Archer says Jod Biden will be the US President 6 years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X