திருச்சிக்கு ஜாக்பாட்.. 5,000 பேருக்கு வேலை! 2,000 கோடியில் மின்னணு நிறுவனம்.. ஸ்டாலினுடன் ஒப்பந்தம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: திருச்சியில் ரூ.2 ஆயிரம் கோடியில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை அமைக்க ஜேபிஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிறுவனத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 12ஆம் தேதி வரை அதாவது 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்காவில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் முதல்வர் மு.க ஸ்டாலின், தொழில் முதலீடுகளையும் ஈர்த்து வருகிறார்

mk stalin trichy employment

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதேபோல, கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இந்த நிலையில்தான், திருச்சியில் 2 ஆயிரம் கோடி ரூபாயில் மின்னணு நிறுவனம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜபில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் அமையும் ஜேபிஎல் எலக்ட்ரானிக் தொழிற்சாலை மூலம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஜேபிஎல் நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக் பொருட்களை விநியோகிக்கிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+