வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாவ் .. ஒரே ஜம்ப்.. அதி வேக சேசிங்.. கூண்டிலிருந்து தப்பிய கைதிகளை விரட்டி பிடித்த ஜட்ஜ்!

தப்பி ஓடிய கைதிகளை நீதிபதி விரட்டி சென்று பிடித்தார்.

Google Oneindia Tamil News

நீதிமன்ற வளாகத்தில் விசாரணையின்போது தப்பி ஓடிய இரண்டு கைதிகளில் ஒருவரை துரத்திச் சென்ற நீதிபதி அவரை மடக்கிப் பிடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாஷிங்டன்: தப்பி ஓடிய கிரிமினல்களை டைவ் அடித்து... எகிறி குதித்து... விரட்டி பிடித்து மடக்கி பிடித்துள்ளார் ஒருவர்!! அந்த சூப்பர் மேனாக மாறியது யார் தெரியுமா? ஒரு ஜட்ஜ் ஐயாதான்!!

வாஷிங்டன் மாகாணத்தில் லூயிஸ் கவுண்ட்டி மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த கோர்ட்டில் நீதிபதியாக உள்ளவர் பஸார்ட் என்பவர். வழக்கம்போல் கோர்ட் துவங்கியது. அப்போது ஒரு கிரிமினல் வழக்கு ஒரு விசாரணை வந்தது.

கைவிலங்கு

கைவிலங்கு

இது சம்பந்தமாக 2 குற்றவாளிகளை கூண்டில் அழைத்து வந்து ஜட்ஜ் முன்னாடி நிறுத்தினார்கள். அப்போது அவர்களின் கைகளில் விலங்கிடப்பட்டு இருந்தது. உடனடியாக விசாரணையை துவக்க முயன்றார் ஜட்ஜ்.

எகிறி குதித்தார்

எகிறி குதித்தார்

ஆனால் திடீரென்று 2 கிரிமினல்களும் கூண்டிலிருந்து கீழே இறங்கி ஓடினார்கள். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் எல்லோருமே ஒன்றும் புரியாமல் ஷாக் ஆகி நின்றனர். ஆனால் நம்ம ஜட்ஜ் ஐயா, உட்கார்ந்திருந்த தனது நாற்காலியில் இருந்து ஒரே ஜம்ப்-ஆக எகிறி எதிர்புறமாக குதித்தார். தான் உடுத்தியிருந்த நீதிபதி டிரஸ்ஸை அவசர அவசரமாக கழற்றி வீசினார். பிறகு தப்பி ஓடிய கிரினமில்களை விரட்டி பிடிக்க ஆரம்பித்தார்.

ஒருவர் சிக்கினார்

ஒருவர் சிக்கினார்

விசாரணை அறை மாடியில் இருந்ததால் கிரிமினல்கள் படிக்கட்டில் இறங்கி ஓடி வந்தனர். ஆனால் ஜட்ஜ், அவர்களை விட ஃபாஸ்ட்... அவரும் வேகவேகமாக படிகளில் இறங்கி தப்ப முயன்றவர்களை பாய்ந்து பிடித்தார். ஆனால் நீதிபதியால் ஒருவரைதான் பிடிக்க முடிந்தது. இன்னொருவர் தப்பி ஓடினார். ஆனால் அங்கிருந்த கோர்ட் போலீசார் அவரையும் மடக்கி பிடித்துவிட்டார்கள்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ஜட்ஜ் ஒருவர் இப்படி தாவி பாய்ந்தோடி சென்று குற்றவாளிகளை விரட்டி சென்று பிடித்ததை பார்த்ததும் கோர்ட்டில் இருந்த எல்லோருக்கும் இன்னும் ஷாக் எகிறியது. நீதிபதியின் இந்த வீர செயல்தான் தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடவே நீதிபதி பஸார்டுக்குப் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

English summary
Judge chases inmates who tried escaping from courtroom, catches 1
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X