"கைலாசா" எப்படி பட்ட நாடு தெரியுமா? நித்யானந்தா தரப்பில் வெளியான புது விளக்கம்!
வாஷிங்டன்: சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத நித்யானந்தா தனது கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்று இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், நித்யானந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் கைலாசா குறித்த சில தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் கைலாசா எப்படிப் பட்ட நாடு என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யானந்தா. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் நாட்டை விட்டு தப்பி ஓடினார். தற்போது கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறிக்கொள்ளும் நித்யானந்தா, தனி கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஐநா சபை அங்கீகாரம் கொடுத்ததாக
அது மட்டும் இன்றி கைலாசா நாட்டில் குடியேற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கூட அறிவிப்பை வெளியிட்டார். இதற்கெல்லாம் ஒரு படி மெலே சென்று, தனது கைலாசா நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐநா சபை அங்கீகாரம் கொடுத்ததாக கைலாசாவின் இணைய பக்கத்தில் புகைப்படங்களை நித்யானந்தா தரப்பு வெளியிட்டது. அதுபோக கைலாசா நாட்டின் பெருமைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நித்தியானந்தா ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு.

கைலாசாவுடன் ஒப்பந்தம்
சமீபத்தில் உள்ள சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் 30 நகரங்களை ஏமாற்றியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதைத்தொடர்ந்து கைலாசாவுடன் செய்த ஒப்பந்தத்தை அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நேவார்க் நகரம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த அமெரிக்காவின் பிற நகரங்களும் அதனை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாகரீகத்தின் மறுமலர்ச்சியாக
சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத நித்யானந்தா தனது கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், தான் நித்யானந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் கைலாசா குறித்த சில தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- "பண்டைய அறிவொளி பெற்ற இந்து நாகரீகத்தின் மறுமலர்ச்சியாக நாங்கள் செயல்படுகிறோம்.

குற்றச்சாட்டுக்கள் தவறானவை
ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நாங்கள் செயல்படுகிறோம். எல்லையற்ற சேவை சார்ந்த தேசமான மால்டாவை போன்ற ஒரு நாட்டின் உணர்வில் கைலாசா நிறுவப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நித்யானந்தாவின் தரப்பில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், "மால்டாவை போன்று கைலாசா பல நிறுவனங்கள் மற்றும் பல நாடுகளில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் கோவில்கள், மடாலயங்கள், மூலமாக செயல்படுகிறது. நித்யானந்தா மீதான பல குற்றச்சாட்டுக்கள் தவறானவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அமைதியே எங்கள் நோக்கம்
மேலும், நேவார்க் நகரத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறித்து நித்யானந்தா தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், உலகளாவிய அமைதிக்கான எங்கள் நோக்கத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று நித்யானந்தா தரப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications