2011ல் கமலா ஹாரிஸ் செய்த சம்பவம்! கண்ணீர் விட்டு கதறும் 13 வயது சிறுமி? அதிரும் அமெரிக்கா! என்னாச்சு
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவும் இதில் சிறுமி ஒருவர் முடமாகிவிட்டதாகவும் இணையத்தில் பரவி வரும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள்.

அதிபர் தேர்தல்: இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த முறை போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே கூறப்பட்டு வருகிறது.. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தொடர்பாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அதாவது அவர் கடந்த 2011ஆம் ஆண்டில் சான்பிரான்சிஸ்கோவில் தாறுமாறாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவும் இதில் 13 வயது சிறுமி நடக்கவே முடியாத அளவுக்குக் காயமடைந்துவிட்டதாகத் தகவல் பரவியது. இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், கமலா ஹாரிஸ் குறித்து இதுபோன்ற செய்தி பரவுவது சர்ச்சையானது. இதற்கிடையே இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதாவது கமலா ஹாரிஸ் குறித்துப் பரவும் இந்த செய்தி போலியானது என்றும் இந்த தவறான தகவலை ரஷ்யா திட்டமிட்டுப் பரப்புவதாகவும் மைக்ரோசாப்ட் விளக்கமளித்துள்ளது.
போலி செய்தி: இதற்காக ஒரு சிறுமிக்குப் பணம் கொடுத்து இதுபோல நடிக்க வைத்தாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மேலும், இந்த செய்தி "KBSF-TV" என்ற சேனலில் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அப்படியொரு சேனலே சான் பிரான்சிஸ்கோவில் இல்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவே இதைத் திட்டமிட்டுச் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் தலையீடும் நோக்கிலேயே ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் கூறுகையில், "பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகிய நிலையில், அடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருந்த கமலா ஹாரிஸை குறிவைத்து இந்த செய்தியைப் பரப்பியுள்ளனர். கமலா ஹாரிஸ் மற்றும் வால்ஸ் ஆகியோர் குறித்துப் பல போலி செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
கோரிக்கை: அதன்படி முதலில் விபத்து ஏற்பட்டதாகத் தகவலைப் பரவிய இந்த கேங், அதன் பிறகே கமலா ஹாரிஸ் இந்த விபத்தை ஏற்படுத்தியதாகவும் இதில் இந்த சிறுமி மொத்தமாக முடங்கிவிட்டதாகவும் போலி செய்திகளைப் பரப்பியுள்ளனர். கமலா ஹாரிஸை குறிவைத்து மட்டுமே இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளதா.. இல்லை இரு அதிபர் வேட்பாளர்கள் குறித்தும் பரப்பப்பட்டதாக என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனப் பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரம் இந்த தகவலுக்கு ரஷ்யா இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக ரஷ்யா தரப்பு இதற்கு இதுவரை எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications