அமெரிக்க வரலாற்றில் முதல்முறை! சரித்திரம் படைத்த கமலா ஹாரிஸ்- ஒரே நாளில் குவிந்த ரூ.677 கோடி நன்கொடை
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ரேஸில் இருந்து பைடன் விலகிய நிலையில், அவர் கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை அளித்தார். எப்போது பைடன் விலகினாரோ அப்போது முதலே கமலா ஹாரிஸுக்கான நன்கொடை அங்கே குவிந்து வருகிறது. அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் இந்திய மதிப்பில் சுமார் 677 கோடி ரூபாய் கமலா ஹாரிஸுக்கு நன்கொடையாகக் குவிந்துள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிட இருந்தார். இருப்பினும், அவரது உடல்நிலை காரணமாக அவர் போட்டியிடக் கூடாது எனப் பலரும் வலியுறுத்தினர்.

அவருக்கான அழுத்தம் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி அதிபர் ரேஸில் இருந்து பைடன் விலகினார். நாடு மற்றும் கட்சியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பைடன், அதிபர் தேர்தலுக்குக் கமலா ஹாரிஸ் பெயரை முன்மொழிந்தார்.
கமலா ஹாரிஸ்: இதற்கிடையே பைடன் விலகிய உடனேயே கமலா ஹாரிஸுக்கு நன்கொடை குவிந்து வருகிறது. முதல் 24 மணி நேரத்தில் மட்டும் 81 மில்லியன் டாலர் அதாவது ரூ. 677 கோடி நன்கொடை குவிந்துள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படும் நிலையில், அவருக்கு நன்கொடை குவிந்து வருகிறது.
இது தொடர்பாகக் கமலா ஹாரிஸ் பிரச்சார குழு செய்தித் தொடர்பாளர் கெவின் கூறுகையில், "கமலா ஹாரிஸுக்கு வலுவான அடித்தளம் இருக்கிறது. அதைப் பார்த்து டொனால்ட் டிரம்ப் அச்சத்தில் இருக்கிறார். இனிமேல் டிரம்பால் இஷ்டத்திற்கு மக்களைப் பிளவுபடுத்த முடியாது. இது தெரிந்ததாலேயே டிரம்ப் இப்போது அச்சத்தில் இருக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.
குவியும் நன்கொடை: கமலா ஹாரிஸ் தரப்பிற்குப் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் 81 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 677 கோடி நன்கொடையாகக் குவிந்துள்ளது. இது கமலா ஹாரிஸுக்கு அங்கே மக்களிடையே அதிகரிக்கும் செல்வாக்கையே காட்டுவதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அடித்தட்டு தொண்டர்களிடம் இருந்து அதிக நன்கொடை வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 8.88 தொண்டர்கள் நன்கொடை கொடுத்துள்ளனர். அதிலும் அவர்களில் 60% பேர் இந்த ஆண்டில் முதல்முறையாக நன்கொடை அளிக்கிறார்கள். அதாவது இவர்கள் பைடன் ரேஸில் இருந்த வரை நன்கொடை தரவில்லை. பைடன் விலகிய பின்னரே நன்கொடை கொடுத்துள்ளார்கள்.
அமெரிக்க வரலாற்றில் முதல்முறை: அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்தவொரு வேட்பாளரும் இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாகச் சேர்த்ததே இல்லை என்றும் கூறப்படுகிறது. பலரும் வாரவாரம் நன்கொடை தரவும் உறுதியளித்துள்ளனராம். மேலும், கமலா ஹாரிஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை ஓவர் நைட்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இவை எல்லாம் கமலா ஹாரிஸுக்கான செல்வாக்கைக் காட்டுகிறது.
எப்போது: அதிபர் ரேஸில் இருந்து விலகிய பைடனும் கூட கமலா ஹாரிஸுக்கு தான் ஆதரவு அளித்துள்ளார். அதேபோல பில் கிளின்டன், ஹிலாரி கிளின்டன் எனப் பல ஜனநாயக கட்சியினரின் ஆதரவும் கமலா ஹாரிஸுக்கு தான் இருக்கிறது. அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படவே வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்பட்டாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. வரும் ஆகஸ்ட் 19-22 தேதிகளில் ஜனநாயக தேசிய மாநாடு நடக்கும் நிலையில், அங்கே தான் அதிபர் வேட்பாளர் யார் என்பதற்கான பதில் கிடைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications