மருத்துவமனையில் ஜோபிடன்.. அமெரிக்க அதிபராக ஒன்றரை மணி நேரம் செயல்பட்ட கமலா ஹாரிஸ்!
வாஷிங்டன்: ஜோ பிடனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுவதை அடுத்து அதிபருக்கான அதிகாரங்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டதை அடுத்து அவர் அதிபராக பொறுப்பேற்றார். சுமார் 1.25 மணி நேரம் அவர் அதிபராக செயல்பட்டார். இதன் மூலம் அதிபரின் அதிகாரங்களை பெற்ற அமெரிக்காவின் முதல் பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றார்.
Recommended Video

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் பதவி வகித்து வருகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.
அமெரிக்கா வரலாற்றிலேயே அதிக வயதில் அதிபராக பதவி வகிக்கும் அதிபர் ஜோ பிடன் ஆவார். அவருக்கு வயது 79 ஆகும். இந்த நிலையில் அவர் வாஷிங்டன்னில் உள்ள மருத்துவமனையில் குடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு கொலோனோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். இதனால் அமெரிக்க அதிபரின் அதிகார பொறுப்பை அவர் திரும்பி வரும் வரை கமலா ஹாரிஸ் கவனிப்பார் என்றும் அவருக்கு அந்த பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவர் ஒரு மணி நேரம் 25 நிமிடங்களுக்கு அப்பதவியில் இருந்தார். எனினும் அவர் அதிபருக்கான இருக்கையில் அமரவில்லை. அமெரிக்க சட்டவிதிகளின்படி மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் போது மயக்க நிலையில் இருக்கும் போது அதிபரின் அதிகாரங்கள் தானாகவே துணை அதிபருக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் முதல் பெண், அதிபர் அதிகாரங்களை பெற்ற முதல் பெண், அமெரிக்க அதிபருக்கான அதிகாரங்களை பெற்ற முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமைகளை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். ஏற்கெனவே அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண், முதல் கறுப்பின பெண் மற்றும் முதல் தெற்காசிய அமெரிக்கர் போன்ற பெருமைகளை பெற்றிருந்தார்.
இந்த அதிகாரத்தின் மூலம் அமெரிக்க ராணுவம் மற்றும் அணு ஆயுத அதிகாரங்கள் கமலாவுக்கு கிடைத்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் முடிந்து மீண்டும் அதிபராக ஜோ பிடன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications