வரலாறு படைத்த கமலா ஹாரிஸ்.. அமெரிக்க துணை அதிபரான நம்ம ஊரு பெண்.. ஆசி வழங்கிய அய்யனார்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் புது வரலாறு படைத்துள்ளார். அமெரிக்காவின் துணை அதிபர் என்ற உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் இவர்தான்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கிறார்.

அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஹாரிஸ்தான். 55 வயதான கமலா ஹாரிஸ் ஏற்கனவே கலிபோர்னியாவிலிருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற சாதனையை அப்போது அவர் படைத்தார்.

சென்னையில் வசித்த தாய்

சென்னையில் வசித்த தாய்

துணை அதிபராக பதவியேற்பதன் மூலம், அவர் 2024 இல் அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவார்.
கமலா ஹாரிஸ் தாயார் ஷியாமலா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர். அவர் திருமணத்திற்கு முன்பு கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் குடியேறினார்.

ஜமைக்கா நாட்டுக்காரருடன் திருமணம்

ஜமைக்கா நாட்டுக்காரருடன் திருமணம்

கலிபோர்னியாவில் படித்தவர். அங்கேயே டாக்டர் பட்டம் பெற்றார். மார்பக புற்றுநோய் நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளராக புகழ்பெற்றவர். அப்போதுதான் அவர் ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸை மணந்தார். டொனால்ட் ஹாரிஸ், ஜமைக்கா பொருளாதார நிபுணர்.
கமலா ஹாரிஸ், 1964ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தார். அவர் ஒரு வழக்கறிஞராக தொழிலை துவங்கினார். 2003ல் அவர் சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரலாறு படைத்தார்

வரலாறு படைத்தார்

அமெரிக்கா முழுவதும் வாழும் பல கோடி வெளிநாட்டிலிருந்து குடிபெயர்ந்தோரை ஈர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது ஜனநாயக கட்சி. அதற்கு பலன் கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் சகோதரி மாயா ஹாரிஸ் கனடாவில் குடியேறியுள்ளார். கமலா ஹாரிஸ் முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க துணை அதிபர், முதலாவது ஆசிய அமெரிக்க துணை அதிபர், முதலாவது இந்திய அமெரிக்க துணை அதிபர் என பல புகழ்களைப் பெறுகிறார்.

அய்யனாருக்கு பூஜை

அய்யனாருக்கு பூஜை

கமலா ஹாரிஸின் அம்மா வழி தாத்தா, மன்னார்குடியை சேர்ந்தவர். பைங்காநாடு கிராமத்தில் இருக்கும் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர்தான் கமலா ஹாரிஸின் தாத்தா கோபாலன். கோபால் சிவில் சர்வீஸ் அதிகாரியாக ஆங்கிலேயர் காலத்திலேயே பணியாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில்தான், கமலா ஹாரிஸின் சொந்த ஊரான மன்னார்குடி அருகே துளசேந்திரபுரத்தில் உள்ள குல தெய்வமான அய்யனார் கோவிலில் கடந்த 3ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஊர்க்காரர்களும், சொந்தக்காரர்களும் இந்த பூஜையில் பங்கேற்றனர். பின்னர் கோலம் போட்டும் கமலாவுக்கு வாழ்த்து கூறினர். முன்னதாக கமலாவை வாழ்த்தி இந்த ஊரில், கட்அவுட், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+