குடும்பம், துணை அதிபர் பணிகளுக்கு நடுவே ஃபிட்னஸுக்கும் முக்கியத்துவம்.. கமலா ஹாரீஸ் ஜாக்கிங் வீடியோ!
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரஹாம் லிங்கன் மெமோரியலில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஜாக்கிங் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். இதையடுத்து துணை அதிபராக கமலா ஹாரீஸ் பொறுப்பேற்றார். துணை அதிபர் பதவி வகிக்கும் முதல் கருப்பினத்தவர், முதல் தென்னிந்தியர், முதல் பெண் உள்ளிட்ட சிறப்புகளை எல்லாம் அவர் பெற்றார்.
ஜோ பிடனும் கமலாவும் கடந்த மாதம் 20-ஆம் தேதி பதவியேற்றனர். தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு முன்பே அவர் மீது உலகின் பார்வை விழத் தொடங்கியது.

பூர்வீகம்
அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்தார். பின்னர் தன்னால் அதிக அளவு பணம் செலவழிக்க முடியாது என்பதால் அந்த முடிவை கைவிட்டார். இந்த நிலையில் கமலா ஹாரீஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Kamala Harris got the secret service running up and down these stairs 😭 pic.twitter.com/nnpF0bvSpB
— Stenda🚀💚 (@__extenda__) February 9, 2021
ஆபிரஹாம் லிங்கன்
இந்த நிலையில் துணை அதிபராக பதவியேற்றுக் கொண்ட நிலையில் வழக்கம் போல் குடும்பம், ஆட்சி என கவனித்து கொள்ளும் கமலா தனது பிட்னஸையும் கவனிக்க தவறுவதில்லை. அண்மையில் அவர் ஆபிரஹாம் லிங்கன் மெமோரியலில் ஜாக்கிங் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மஃப்டி
தனது கணவருடன் இணைந்து அவர் ஜாக்கிங் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவரின் பாதுகாவலர்களும் மஃப்டியில் நின்று பாதுகாப்பு பணியை செய்து வருகிறார்கள். குடும்பம், வேலை என இரண்டையும் பேலன்ஸ்டாக கையாளும் கமலா ஹாரீஸ் தன்னுடைய பிட்னஸையும் சேர்த்து கவனித்துக் கொள்கிறார்.

உதாரணம்
திருமணம் ஆகி வேலைக்கு செல்லும் சில பெண்கள் குடும்பம், வேலை என ஓடிக் கொண்டிருப்பதால் தங்கள் உடல்நலம் குறித்து அக்கறை கொள்வதே இல்லை. ஆனால் கமலா ஹாரீஸின் ஜாக்கிங் வீடியோ மூலம் பல பெண்களுக்கு இவர் உதாரணமாக இருப்பார் என தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications