தமிழகத்தின் மகள் VS ஆந்திரா மருமகன்! அமெரிக்க அதிபர் தேர்தலில் இதை கவனிச்சீங்களா! ‛வாவ்’ பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில் அவரது ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதேபோல் மறுபுறம் எடுத்து கொண்டால் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது கட்சியின் ஜேடி வான்ஸ் என்பவரை துணை அதிபராக வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்க தேர்தல் என்பது தமிழகத்தின் மகள் VS ஆந்திராவின் மருமகன் என்று மாறிப்போய் உள்ளது.
அமெரிக்காவில் அதிபர் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகளாகும். இதனால் ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கும் ஒருமுறை அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த முறை 2020ல் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபராக குடியரசு கட்சி சார்பில் மீண்டும் களமிறங்கிய டொனல்ட் டிரம்ப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரை வீழ்த்தியவர் தான் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்க அதிபரானார்.

இந்நிலையில் தான் விரைவில் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறங்கும் நோக்கில் பிரசாரம் செய்த நிலையில் சொந்த கட்சியினரின் வற்புறுத்தலுக்கு இணங்கி தேர்தலில் இருந்து பின்வாங்கி உள்ளார்.
கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இதையடுத்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளார். இவர் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே வெளியாக வேண்டி உள்ளது. இதனால் இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் VS ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் என மாறி உள்ளது.
தமிழக மகள் VS ஆந்திரா மருமகன்: இது ஒருபுறம் இருக்க அமெரிக்க அதிபர் தேர்தலின் இன்னொரு சுவாரசியமான விஷயம் உள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது தமிழகத்தின் மகள் VS ஆந்திரா மருமகன் என்று மாறி உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இது முற்றிலும் உண்மை. ஆம் அதெப்படி என்று தானே கேட்கிறீர்கள்.. வாங்க அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது தமிழகத்தில் மகள் VS இந்தியாவின் மருமகள் என மாறியுள்ளது என்பது இங்கு பார்ப்போம்.
கமலா ஹாரிஸ் யார்: அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கும், தமிழகத்துக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இது நம்மில் பலருக்கும் தெரியும். கமலா ஹாரிஸ் ஒரு இந்திய வம்சாவளி. இன்னும் சொல்லப்போனால் அவரது தாய் தமிழகத்தை சேர்ந்தவர். அதாவது கமலா ஹாரிஸின் தாய் பெயர் சியாமளா. இவரது தந்தை பெயர் கோபாலன். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்.
தமிழகத்துடன் நெருக்கம்: கமலா ஹாரிஸின் தாய் சியாமளா அமெரிக்காவில் செட்டில் ஆனார். சியாமளா ஜமைக்கா நாட்டை சேர்ந்த பேராசிரியர் டொனால்ட் ஜே ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த டொனால்ட் ஜே ஹாரிஸ் - சியாமளா தம்பதியின் மகள் தான் கமலா ஹாரிஸ். அப்படி பார்த்தால் கமலா ஹாரிஸ் தமிழகத்துடன் நெருக்கமான தொடர்பு உள்ளது. ஜனநாயக கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்து கடந்த முறை துணை அதிபரான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.
கோவிலில் பிரார்த்தனை: இதற்கும் முக்கிய காரணம் உள்ளது. அதாவது கமலா ஹாரிஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோவிலில் தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோவிலில் கூட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு கமலா ஹாரிஸ் நன்கொடை அளித்துள்ளார். இப்படி அமெரிக்காவில் வசித்தாலும் கூட தமிழகத்துடன் நெருக்கமான உறவில் இருப்பதால் அவரை தமிழகத்தின் மகள் என்று கூறலாம்.
ஜேடி வான்ஸ்: மறுபுறம் பார்த்தால் குடியரசு கட்சி. இந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்றால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவருக்கும், இந்தியாவுக்கும் பிசினஸ் தொடர்பான தொடர்பு மட்டுமே உள்ளது. ஆனால் நாம் இன்னொரு விஷயத்தை கவனித்து பார்த்தால் இந்த செய்திக்கான உண்மை புரியும். அதாவது அமெரிக்காவின் மில்வாக்கியில் சில நாட்களுக்கு முன்பு குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் டொனால்ட் டிரம்ப் தனது துணை அதிபர் வேட்பாளரை அறிவித்தார். அவரது பெயர் ஜேடி வான்ஸ். இவர் தான் ஆந்திராவின் மருமகன்.
ஆந்திராவின் மருமகன்: அதாவது ஜேடி வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தபோது அவர் தனது மனைவி உஷா சிலுக்குரியுடன் கைகோர்த்து மேடைக்கு வந்தார். அதாவது மனைவி உஷா சிலுக்குரி இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். உஷாவின் பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். இவர்கள் அமெரிக்காவில் செட்டிலானார்கள். உஷா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். சட்டப்படிப்பை படித்தவர். சட்டப்பள்ளியில் உஷா படித்தபோது ஜேடி வான்ஸ் அவருக்கு பழக்கமானார். இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இதன்மூலம் ஜேடி வான்ஸ் ஆந்திராவின் மருமகனாக உள்ளார்.
கட்சி மாறிய மனைவி: மேலும் திருமணமான புதிதில் கணவர் ஜேடி வான்ஸ் தொடர்ந்து குடியரசு கட்சியில் பயணித்தார். ஆனால் உஷா தொடர்ந்து ஜோ பைடனின் ஜனநாயக கட்சியின் உறுப்பினராக பயணித்தார். அதன்பிறகு 2016க்கு பிறகு தான் உஷா தனது நிலைப்பாட்டை மாற்றி ஜனநாயக கட்சியில் இருந்து குடியரசு கட்சி உறுப்பினராக மாறினார். ஜேடி வான்ஸின் அரசியல் வளர்ச்சிக்கு உஷா தற்போது பக்கபலமாக உள்ளார். இத்தகைய சூழலில் தான் குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பை விமர்சித்தவர்: மேலும் ஜேடி வான்ஸின் அரசியல் பின்னணியைபார்த்தால் அவர் தற்போது ஓஹியோவைச் சேர்ந்த குடியரசு கட்சியின் செனட்டராக உள்ளார். அவருக்கு வயது 39. ஒரு காலத்தில் டொனால்ட் டிரம்பையை கடுமையாக எதிர்த்தவர் என்பதோடு வெளிப்படையாக விமர்சித்தவர். சொந்த கட்சியை சேர்ந்தவர், அமெரிக்காவின் அதிபர் என்று பாராமல் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தவர் தான் இந்த ஜேடி வான்ஸ். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு தீமையை ஏற்படுத்தும் நபர், மோசமானவர். அமெரிக்காவின் ஹிட்லர் என வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்தவர் தான் ஜேடி வான்ஸ். அதன்பிறகு டொனால்ட் டிரம்பின் ஆதரவாளராக மாறினார். தற்போது அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சி மூலம் டொனால்ட் டிரம்ப்பே அறிவித்துள்ளார்.
வெல்வது யார்: தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக இருக்கிறார். அதேபோல் மறுபுறம் குடியரசு கட்சி சார்பில் ஜேடி வான்ஸ் துணை அதிபராக களமிறங்க உள்ளார். ஜேடி வான்ஸ் நிச்சயம் தனது கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை வெற்றி பெற வைக்க போராடுவார். அதேவேளையில் கமலா ஹாரிசும் தேர்தலில் வெல்லும் முனைப்பில் தீவிரம் காட்டுவார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது தமிழகத்தின் மகள் VS ஆந்திராவின் மருமகன் என மாறியுள்ளதை நம்மால் மறுக்க முடியாது. இதில் வெல்லப்போவது யார்? என்பதை அறிய நாம் இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications