Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகத் தலைவர்கள் டிரம்ப்பைப் பார்த்து சிரிக்கிறார்கள்.. பிளவுபடுத்துபவர்.. டிரம்ப் vs கமலா விவாதங்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகத் தலைவர்கள் டிரம்ப்பைப் பார்த்து சிரிக்கிறார்கள். டிரம்பை அவமானகரமானவர் என்று சொல்லும் இராணுவத் தலைவர்களுடன் நான் பேசுயிருக்கிறேன் என்று கமலா ஹாரிஸ் கூறினார். டிரம்ப் பேசும் போது, கமலா ஹாரிஸின் கீழ் இஸ்ரேல் அழிந்துவிடும் என்றார். கமலா ஹாரிஸ் ஜோ பைடனையே வெறுக்கிறார் என்றார்..

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான தருணம் என்றால் அதிபர் வேட்பாளர்கள் இருவருமே நேரடியாக அமர்ந்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசுவது தான். இந்த நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மேல் தொடங்கியது.

இதில் குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் பென்சில்வேனியாவில் தங்களின் தொலைக்காட்சி விவாதத்தை எதிர்கொண்டனர். அண்மையில் நடந்த கருத்துக் கணிப்புகளின்படி பெண் வாக்காளர்கள் மத்தியில் கருக்கலைப்பு விவகாரத்தில் எடுத்த முடிவுகளால் கணிசமான ஆதரவு உள்ளது. அதேநேரம் டிரம்ப் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு குடியேற்றம் போன்ற பிரச்சினைகளில் கமலா ஹாரிஸை குறிவைத்து பேசி வருகிறார்.

us presidential election 2024 kamala harris donald trump

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையேயான போட்டியில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இந்நிலையில் கமலா ஹாரிஸ் இன்று நடந்த விவாதத்திற்காக ஐந்து நாட்கள் ஓட்டலிலேயே தனியாக அமர்ந்து பேசுவதற்கு தயாரானதாக கூறப்படுகிறது. மொத்தம் 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதம், பார்வையாளர்கள் யாருமே இல்லாமல் நடந்து முடிந்தது.

அதில் இருவரும் பேசிய முக்கிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.

ஏபிசி நியூஸ் மதிப்பீட்டாளர் டேவிட் முயர்: " நீங்கள் 2020ல் தோற்றுவிட்டீர்கள் என்பதை இப்போது ஒப்புக்கொள்கிறீர்களா?" கேட்டார். "இல்லை, நான் அதை ஒப்புக்கொள்ளவே இல்லை. அது கிண்டலுக்காக கூறப்பட்டது," என்று டிரம்ப் கூறினார்.

டொனால்ட் டிரம்ப்: கமலா ஹாரிஸ் அதிபரானால் இஸ்ரேல் அழிந்துவிடும். கமலா இஸ்ரேலை வெறுக்கிறார். நெதன்யாகு இங்கு வந்த போது கூட கமலா அவரை சந்திக்கவில்லை. கமலா ஹாரிஸ் அரபு மக்களையும் வெறுக்கிறார். மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். நான் அதிபராக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.

கமலா ஹாரிஸ்: இது முற்றிலும் உண்மை இல்லை. டிரம்ப் 81 மில்லியன் மக்களால் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதிபராக செயல்படுவதில் மிகவும் சிரமப்பட்டார். உலகத் தலைவர்கள் டிரம்ப்பைப் பார்த்து சிரிக்கிறார்கள். டிரம்பை அவமானகரமானவர் என்று சொல்லும் இராணுவத் தலைவர்களுடன் நான் பேசுயிருக்கிறேன்.

கமலா: நான் முன்னாடியே சொன்னேன், இவர் இப்படித்தான் எப்போதுமே நிறைய பொய்கள் சொல்வார். டிரம்ப் எப்படி பட்டவர் என்று பார்த்தீங்கன்னா, "உலகில் சர்வாதிகாரிகளை போற்றுகிறவர், ரஷ்ய அதிபர் புதினை அவர் ஆதரிப்பவர்.. சர்வாதிகாரிகளை அவர் ஆதரிப்பவர் என்று நமக்கு தெரிக்கும். அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங்குடன் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்வதும் நம் அனைவருக்குமே தெரியும்.

டொனால்ட் டிரம்ப்: ரஷ்யா உக்ரைன் இடையே போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மக்கள் தேவையின்றி கொல்லப்படுகின்றனர். எனக்கு புதினை நன்றாகத் தெரியும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு நல்ல உறவு இருக்கிறது. எனவே நான் பிரச்சினையை தீர்த்து வைப்பேன்.

கமலா ஹாரிஸ்: டொனால்ட் டிரம்ப் அதிபரானால் ரஷ்யா உக்ரைன் போர் 24 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று கூறுகிறார், ஏனெனில் அவர் அந்த போரை அப்படியே அவர் கைவிடுவார் என்று நான் நினைக்கிறேன். டிரம்ப் அதிபராக இருந்தால், புடின் இப்போது உக்ரைனின் கீவிலேயே போய் செட்டில் ஆகியிருப்பார்..

டொனால்ட் டிரம்ப்: ஜோ பைடன் அரசு சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது அதுவும் எப்போது? ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய மூன்று நாட்களுக்குப் பிறகு, (ரஷ்யா-உக்ரைன்) போரும் தொடங்கி விட்டது. அவர் (ஜோ பைடன்) நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அதிபர். கமலா ஹாரிஸ் தான் மோசமான துணை அதிபர் என்றார்

கமலா ஹாரிஸ்: "முன்னாள் அதிபர் டிரம்புக்கு முதலில் ஒரு விஷயத்தை நினைவூட்ட வேண்டியது முக்கியம் , நீங்கள் ஜோ பைடனுக்கு எதிராக போட்டியிடவில்லை, எனக்கு எதிராக போட்டியிடுகிறீர்கள் " என்று அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் குறித்து டிரம்ப் vs கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்: ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் பைடனின் முடிவை நான் ஏற்றுக்கொண்டேன். தலிபான் என்ற பயங்கரவாத அமைப்போடு டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

டொனால்ட் டிரம்ப்: நாங்கள் ஜோ பைடனை விட வேகமாக வெளியேறியிருப்போம். அப்படி செய்திருந்தால் பல அமெரிக்கர்கள் நம்மை விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள். இது நம் நாட்டின் வரலாற்றில் மிகவும் சங்கடமான தருணம்.

டொனால்ட் டிரம்ப்: கமலா ஹாரிஸ் (இந்தியா ஜமைக்கா வம்சாவளி என்பதை குறிக்கும் வகையில்) எந்த நாட்டின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை என்றார்

கமலா ஹாரிஸ்: எப்பொழுதும் பிளவுபடுத்தும் செயலில் ஈடுபடும் ஒருவர் அதிபராக வர வேண்டும் என்று விரும்புபவர் நம்மிடம் இருப்பது ஒரு சோகம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+