புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டேன்! கர்நாடகாவை மிஸ் செய்கிறேன்! சிவராஜ்குமார் உருக்கம்
வாஷிங்டன்: தான் புற்றுநோயிலிருந்து மீண்டதாக நடிகர் சிவராஜ்குமார் அமெரிக்காவிலிருந்து புத்தாண்டையொட்டி வீடியோ வாயிலாக உருக்கமாக தெரிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வீடியோவில் சிவராஜ்குமார் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த நேரத்தில் நான் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேனோ என்பதால் பேசுவதற்கு தயக்கமாக இருக்கிறது. கர்நாடகாவை விட்டு அமெரிக்காவில் இருந்து எனக்கு உருக்கமான அனுபவமாக உள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் அச்சம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் எனது ரசிகர்கள் ஆதரவால் அது கணிசமாக குறைந்துள்ளது. அமெரிக்காவில் எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நன்றாக சிகிச்சை அளித்தனர். 45 ஆவது படத்தின் படப்பிடிப்புபோது எனக்கு கீமோதெரபி கொடுக்கப்பட்டது.
அப்போதே நான் கிளைமாக்ஸில் சண்டை காட்சிகளில் நடித்தேன். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்லும் நாள் நெருங்க நெருங்க எனக்கு பதற்றமாகவே இருந்தது. எனினும் எனது மனைவி கீதா, மகள் நிவேதா ஆகியோர் எனக்கு ஆதரவாக இருந்தனர். டாக்டர் மனோகர் என்பவர்தான் எனக்கு சிகிச்சை அளித்தார். அவர் என்னை குழந்தை போல் பாவித்து சிகிச்சை அளித்தார்.
எனது சிறுநீர் பை முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் யாரும் பயப்படத் தேவையில்லை. நான் நலமாக இருக்கிறேன். இரட்டை ஆற்றலுடன் திரும்பி வருவேன். எனக்கு அளவுக்கடந்த ஆதரவு தரும் எனது ரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மனைவி கீதா சிவராஜ்குமார் கூறுகையில், மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன. அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. அதாவது சிவராஜ்குமாருக்கு கேன்சர் குணமாகிவிட்டது என பரிசோதனை முடிவுகள் சொல்கின்றன. அவருக்கு உடல்நலம் மீண்டதற்கு காரணமே ரசிகர்களின் பிரார்த்தனைகள். இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்றார்.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழில் கேப்டன் மில்லர், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோல் செய்துள்ளார். இதனால் சிவராஜ்குமாரை கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் இதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள போவதாகவும் நவம்பர் மாதம் சொல்லப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் நானும் மனிதன்தான், எனக்கும் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். சில சிகிச்சை முறைகள் முடிந்துவிட்டன. இன்னும் சில சிகிச்சைகள் எடுக்கப்பட வேண்டி இருக்கிறது. அதன் பிறகு நான் இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அறுவை சிகிச்சை செய்து கொள்வேன் என கூறியிருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் திருப்பதி கோயிலுக்கு மனைவியுடன் சென்ற அவர் அங்கு மொட்டை அடித்து சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் அமெரிக்காவுக்கு டிசம்பர் மாத இறுதியில் சென்றார். அங்கு மியாமியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கேன்சர் கட்டி இருக்கும் சிறுநீர் பை (Urinary bladder) நீக்கப்பட்டது. சிவராஜ்குமாரின் குடலை பயன்படுத்தி செயற்கையான பை வைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications