ரூ 520 கோடி.! அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய சைபர் தாக்குதல்.. காரணம் ரஷ்யா? வெளியான பரபர பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய சைபர் தாக்குதல்களில் ஒன்று இப்போது அங்கு நடந்துள்ளது. REvil gang என்று ஹேக்கர் குழு ஹேக் செய்துள்ள தகவல்களை விடுவிக்க 70 மில்லியன் டாலர் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
Recommended Video
சைபர் தாக்குதல் - அமெரிக்கா இப்போது சந்தித்து வரும் பிரச்சினைகளில் இதுதான் முக்கியமானது. சிறு நிறுவனங்கள் மட்டுமின்றி மிகப் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள்கூட சைபர் தாக்குதல்களில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் ரேன்சம்வேர் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அதனைச் சமாளிக்க அந்நாட்டு அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் பெரியளவில் பலன் அளிப்பதில்லை.

மிகப் பெரிய தாக்குதல்
இந்நிலையில், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய சைபர் தாக்குதல்களில் ஒன்று இப்போது அங்கு நடந்துள்ளது. முக்கிய ஐடி நிறுவனங்களுக்கு மென்பொருள் சப்ளையராக இருக்கும் கசேயா நிறுவனத்தின் மீது இந்த ரேன்சம்வேர் தாக்குதல் நடந்துள்ளது. REvil gang என்று ஹேக்கர் குழு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

எத்தனை நிறுவனங்கள் பாதிப்பு
சிறு, குறு மளிகைக் கடை செயின்களுக்கு நிர்வகிக்கும் கசேயா நிறுவனத்தின் சாஃப்ட்வேர்கள் தான் இந்த சைபர் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 70க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 350க்கும் மேற்பட்ட மளிகைக் கடை நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள நிறுவனங்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன.

ரேன்சம்வேர் தாக்குதல் என்றால் என்ன
ரேன்சம்வேர் என்ற முறையில் இந்தத் தாக்குதலை REvil gang நடத்தியுள்ளனர் சமீப ஆண்டுகளாகவே ரேன்சம்வேர் முறையில் நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த முறையில் ஹேக் செய்யும் நபர்கள், ஒட்டுமொத்த கட்டமைப்பையே யாரும் அணுக முடியாதபடி செய்துவிடுவார்கள். ஹேக்கர்கள் அளிக்கும் keyஐ கொண்டு மட்டுமே இந்தத் தகவல்களை விடுவிக்க முடியும். இப்படி யாருமே அணுக முடியாதபடி ஹேக் செய்வதால் இது அந்நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

520 கோடி ரூபாய்
இந்த சைபர் தாக்குதலை நடத்தியுள்ள REvil gang, ஹேக் செய்துள்ள தகவல்களை விடுவிக்க 70 மில்லியன் டாலர் தர வேண்டும் என கேட்டுள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் 520 கோடி ரூபாயாகும். அதுவும் இதை பிட்காயின் முறையிலேயே வழங்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிட்காயின் முறையில் வழங்கப்படும் பணத்தை டிராக் செய்ய முடியாது. சிறிய நிறுவனங்களிடம் 45 ஆயிரம் டாலர் (33.5 லட்சம் ரூபாய்) முதல் பெரிய நிறுவனங்களிடம் 5 மில்லியன் டாலர் (37 கோடி ரூபாய்) வரை ஹேக்கர்கள் கேட்டுள்ளனர்.

பணத்தைத் தந்துவிடுவார்கள்
ஹேக்கிங் சம்பவங்களில் பெரும்பாலும், தங்கள் தகவல்களைப் பாதுகாக்க ஹேக்கர்கள் கேட்கும் பணத்தை நிறுவனங்கள் அளித்துவிடும். ஆனால், பாதிக்கப்படும் நிறுவனங்கள் இப்படிச் செய்யக் கூடாது என்பதை அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், ஹேக்கர்கள் கேட்கும் தொகை என்பது தரவுகளை மீட்க ஆகும் செலவைக் காட்டிலும் மிகக் குறைவு என்பதால் பெரும்பாலும் நிறுவனங்கள் ஹேக்கர்களுக்கு பணம் கொடுத்துவிடுவார்கள்.

பின்னணியில் ரஷ்யா
இப்போது REvil gangஆல் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அரசின் அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி தீவிர விசாரணை நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் ரஷ்யா உள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அப்படி இருந்தால், தக்க பதிலடி தரப்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் பெரும்பாலன சைபர் தாக்குதல்கள் ரஷ்யாவில் இருந்தே நடக்கிறது. இருப்பினும், இதில் ரஷ்ய அரசின் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
-
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications