"பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவில்" இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்
வாஷிங்டன்: பஞ்சாபில் "வாரிஸ் பஞ்சாப் டி" அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, இந்திய தூதரகத்திற்குள் நுழைந்து மூவர்ணக் கொடிகளை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மீது வன்முறை வெறியாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மறைந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வாரிஸ் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை தொடங்கியிருந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் தீப் சித்து உயிரிழந்த பிறகு 'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பதவியேற்றார்.

அம்ரித் பால் சிங்
அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதல் காலிஸ்தான் பிரிவினைவாத கொள்கைகள் அதிகரிக்கத் தொடங்கின. அம்ரித் பால் சிங் உதவியாளரைப் பஞ்சாப் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவருக்காகப் பயங்கர ஆயுதங்களுடன் அம்ரித் பால் சிங் போலீஸ் நிலையத்தைத் தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அப்போது நிலைமையை சமாளிக்க அம்ரித் பால் சிங் உதவியாளர் விடுவிக்கப்பட்டார்.

அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை
இருப்பினும், அப்போது முதலே அம்ரித் பால் சிங்கை போலீசார் தொடர்ந்து கண்காணிக்கத் தொடங்கினர். அதன்படி நேற்று முன்தினம் அவரை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர் இது தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்துக்கு மத்திய பாதுகாப்பு படை அனுப்பி வைக்கப்பட்டது.

78 பேர் கைது
இப்போது வரை வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்த 78 பேரை போலீசார் கைது செய்தனர். பலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முடியவில்லை அவர் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அமிர்த் பால் சிங்கின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட நெருங்கிய உதவியாளர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்திய தூதரக அலுவலகத்தினுள் நுழைந்து
இதனால் பஞ்சாபில் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கைகளை கண்டித்து வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். குறிப்பாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் இந்திய தூதரக அலுவலகத்தினுள் நுழைந்து அங்கே இருந்த மூவர்ணக் கொடிகளை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய தூதரக கட்டிடத்தில் 'ஃப்ரீ அம்ரித்பாலை' என்ற வாசகங்களையும் எழுதினர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தூதரக கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய பாராளுமன்றம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications