Kharg Island: ஈரானின் ”மணிமகுடம்” அடிமடியிலேயே கைவைத்த அமெரிக்கா.. கார்க் தீவில் அப்படி என்னதான் இருக்கிறது?
தெஹ்ரான்: ஈரானின் 80 சதவீத எண்ணெய் உற்பத்தி நடைபெறும் கார்க் தீவில் அமெரிக்கா சக்தி வய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஈரான் திருந்தாவிட்டால் அதையும் தாக்குவோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் Crown Jewel என கருதப்படும் அந்த தீவில் அப்படி என்னதான் உள்ளது? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதல் இரண்டு வாரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஈரானிடம் தாக்குதல் நடத்தும் திறன் இல்லை என்றும் சரண் அடைய வேண்டும் இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கார்க் தீவில் என்ன இருக்கிறது?
ஆனால், ஈரானோ மறுபக்கம் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஈரானின் 80 சதவீத எண்ணெய் உற்பத்தி நடைபெறும் கார்க் தீவில் அமெரிக்கா சக்தி வய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஈரான் திருந்தாவிட்டால் அதையும் தாக்குவோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பாராசீக வளைகுடாவில் உள்ள இந்த கார்க் தீவு, அந்நாட்டின் எண்ணெய் நெட்வொர்க்குக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஈரானின் Crown Jewel என கருதப்படும் அந்த தீவில் அப்படி என்னதான் உள்ளது? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி
ஈரானின் கடற்கரையிலிருந்து சுமார் 16 மைல்கள் (26 கி.மீ) தொலைவில் கார்க் தீவு அமைந்துள்ளது. ஹார்மூஸ் நீரிணையிலிருந்து சுமார் 300 மைல்கள் (483 கி.மீ) வடமேற்குப் பகுதியில் உள்ளது. ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி இங்கிருந்துதான் நடைபெறுகிறது. ஈரான் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் வளைகுடா நாடுகள் எல்லாம் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திவிட்ட போதிலும் ஈரான் இங்கிருந்தே தொடர்ந்து ஏற்றுமதியை செய்து வருகிறது.
கடந்த புதன் கிழமை நிலவரப்படி பல பிரமாண்ட டேங்கர் கப்பல்கள் கார்க் தீவில் நிறுத்தப்பட்டு இருந்தது செயற்கை கோள் தரவுகள் காட்டுகின்றன. போர் தொடங்கிய பிறகும் ஒருநாளைக்கு 1.1 மில்லியன் மற்றும் 1.5 மில்லியன் பேரல்கள் ஒருநாளைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஈரானின் பெட்ரோலியா அமைப்புகளுக்கும் அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமானதாக கார்க் தீவே உள்ளது.
ஈரானின் பல முக்கிய எண்ணெய் வயல்களுக்கு
இப்போது மட்டும் இல்லை.1984 ஆம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இதனை குறிப்பிட்டுள்ளது. கார்க் தீவில் எண்ணெய்யை சேமித்து வைக்கும் அளவிற்கு போதுமான சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த தீவுடன் இணைக்கப்பட்டுள்ள பல குழாய்கள், கடல் வழியாக ஈரானின் பல முக்கிய எண்ணெய் வயல்களுக்கு செல்கிறது.
இந்த குழாய் வழியாக ஈரானின் மிகப்பெரிய அபூசார், ஃபொரூசான் மற்றும் டோரூட் என்ற மூன்று பெரிய கடல்சார் எண்ணெய் வயல்களில் இருந்து கச்சா எண்ணெய் இங்குள்ள டெரிமினலுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் இது கடலுக்கடியில் அமைக்கப்பட்ட குழாய் அமைப்புகள் வழியாக நிலப்பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.
ஈரானின் 90 சதவீத ஏற்றுமதி
அதன்பிறகு அது சேமித்து வைத்தல் அல்லது சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரானின் எண்ணெய் தொழிலுக்கு மிக முக்கிய கட்டமைப்பு இந்த தீவில் இருப்பதால், ஈரானின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இது உள்ளது.
கார்க் தீவில் உள்ள பொதுமக்கள் கட்டமைப்புகள் மீதோ அல்லது எண்ணெய் கட்டமைப்புகள் மீதோ தாக்குதல் நடத்துவது அல்லது அந்த இடம் கைப்பற்றப்படுவது என்பது சர்வதேச எண்ணைய் விலையை மேலும் அதிகரிப்பதாக அமையும் என்று எரிசக்தி துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரானின் 90 சதவீத ஏற்றுமதி இந்த தீவில் இருந்தே கையாளப்படுகிறது. இந்த தீவின் கட்டுப்பாட்டை ஈரான் இழந்தால், ஈரான் நாடு செயல்பாடே முடங்கும் அபாயம் உள்ளது. இந்த தீவில் ராணுவ கட்டமைப்போ அல்லது அணு ஆயுத தளமோ இல்லாவிட்டாலும், ஈரான் அரசு மற்றும் ராணுவத்திற்கு நிதியளிப்பதில் முக்கிய பங்கு இந்த தீவுக்கு உள்ளது.












Click it and Unblock the Notifications