Layoff-ன் கொடூர முகம்.. மைக்ரோசாப்ட்டுக்கு 31 ஆண்டு உழைத்த ஊழியருக்கு நேர்ந்த கதி.. பெரும் சோகம்
வாஷிங்டன்: பல்வேறு ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் பல நிறுவனங்கள் ஊழியர்களின் பல ஆண்டு உழைப்பை மதிக்காமல் திடீரென்று வீட்டுக்கு அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கின்றன. அந்த வகையில் 31 ஆண்டுகளாக ஓயாமல் உழைத்து வந்த ஊழியரை மைக்ரேசாப்ட் நிறுவனம் மனிதாபிமானம் இன்றி திடீரென்று பணி நீக்கம் செய்துள்ளது. தனது பணி நீக்கம் குறித்து அந்த ஊழியர் கூறிய தகவல் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. ஏஐ பயன்பாடு, நிதி மேலாண்மை, நிர்வாக சீரமைப்பு என்ற பெயர்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட், மெட்டா உள்பட பல நிறுவனங்களில் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மே மாதம் முதல் மைக்ரோசாப்ட் நிறுவனம் 6 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதில் பாதிக்கப்பட் ஒருவர் தான் மைக் கோஸ்டெர்சிட்ஸ் (Mike Kostersitz). இவருக்கு தற்போது வயது 60 ஆகிறது. கடந்த 31 ஆண்டுகளாக மைக்ரேசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் அவர் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி மைக் கோஸ்டெர்சிட்ஸ் தனது கவலையை பகிர்ந்து உள்ளார். மேலும் பணி நீக்கம் குறித்த தகவல் அவருக்கு எப்படி தெரிவிக்கப்பட்டது என்பது பற்றி அவர் விளக்கி உள்ளார். இதுதொடர்பாக மைக் கோஸ்டெர்சிட்ஸ் கூறுகையில், ‛‛நான் மற்றும் 120 பிற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டோம். கடந்த மே மாதம் எனக்கு எனது மேனேஜருடன் மீட்டிங் இருந்தது. அந்த மீட்டிங் நன்றாகவே சென்றது. ஆனால் மறுநாள் காலையில் எனக்கு இன்னொரு மீட்டிங்கில் பங்கேற்கும்படி கூறினார்கள்.
அப்போது தான் பணி நீக்கம் செய்தனர். என்னுடன் சேர்த்து உலகம் முழுவதும் 6 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். எனது மேனேஜரும் பணியை இழந்தார். கடந்த 31 ஆண்டுகளாக நான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். இதனால் மேனேஜர் அல்லது VP மூலமாக அழைத்து பேசி பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், அதற்கான காரணத்தையும் கூறி இருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இது வருத்தத்தை தந்துள்ளது.
இருப்பினும் மைக்ரேசாப்ட்டில் 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் 15 ஆண்டுகள் வரை வேலை செய்து இருந்தால் பணி நீக்கத்துக்கு Stack Grants-யை திரும்ப பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹேப்பியாக உள்ளது. நான் 67 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் 60 வயதில் பணி நீக்கம் செய்துள்ளனர். இது எனது வாழ்க்கையை மாற்றி உள்ளது. இருப்பினும் என்னை பொறுத்தவரை மைக்ரேசாப்ட்டின் 31 ஆண்டு கால வாழ்க்கையை ஒருபோதும் மறக்க முடியாது'' என்று கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட்டால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள மைக் தற்போது புதிய பணிகளை தேடிவ வருகிறார். Nike, Nvidia உள்பட பல முன்னணி நிறுவனங்களின் இண்டர்வியூவில் பங்கேற்றுள்ளார். இருப்பினும் அவருக்கு வேலை என்பது இன்னும் கிடைக்கவில்லை. அவர் தொடர்ந்து பணியை தேடி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications