"உடலுறவுக்கு ஓகே சொன்னால் ‘கிரீன்கார்டு’".. லெபனான் பெண்ணுக்கு அமெரிக்க அதிகாரியின் பகீர் ஆஃபர்
வாஷிங்டன்: ''உங்கள் கணவருக்கு வயதாகிவிட்டது. அவரால் ஒன்றுமே செய்ய முடியாது. இதனால் என்னுடைய உடலுறவு வைக்க வேண்டும். அப்படி செய்தால் கிரீன்கார்டு பெற உதவுகிறேன்'' என்று அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத்துறை சொன்னதாக லெபனான் பெண் ஒருவர் கூறி பரப்பை கிளப்பி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிகளை கடுமையாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து வாழ்ந்து வருவோர்களை கண்டறிந்து வெளியேற்றும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நடவடிக்கையில் சமீபத்தில் லெபானான் நாட்டை சேர்ந்த 21 வயது இளம்பெண் சிக்கினார். இவர் கடந்த 2024ம் ஆண்டில் மாண்ட்ரீலில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் லெபனான் நாட்டை சேர்ந்த பெண் அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரி மார்க்கெல் வாலஸ் என்பவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:
''நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக பேச வேண்டும் என்று மார்ககெல் வாலஸ் என்னை அழைத்தார். நான் டெக்சாஸ் பகுதியில் உள்ள ரேமண்ட்வில்லி என்ற இடத்தில் அமைந்து இருக்கும் தடுப்பு காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டேன். அப்போது மார்கெல் வாலஸ் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். தனிமைப்படுத்தப்பட்ட மற்றமு் தானாக பூட்டிக்கொள்ளும் அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்தார். தொடக்கூடாத இடங்களை தொட்டார்.
உங்கள் கணவருக்கு வயதாகிவிட்டது. அவரால் ஒன்றுமே செய்ய முடியாது. இதனால் என்னுடன் உடலுறவுக்கு வர வேண்டும். என்னுடன் உலலாசமாக இருந்தால் கிரீன்கார்டு பெற உதவி செய்வேன். இல்லாவிட்டால் கணவரையும் சிறையில் அடைத்து நாடு கடத்துவேன் எனமிரட்டினார். ஆனால் நான் அவரது ஆசைக்கு இணஙகவில்லை.
நான் அங்கு ஒரு கைதியாக இருந்தேன். ஆனால் அவர் எனது வழக்கு, விடுதலை மற்றும் மருத்துவம் உள்ளிட்டவற்றில் செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரியாக இருந்தார். இதனால் அந்த அறையில் இருந்து என்னால் முழுவதுமாக வெளியேற முடியவில்லை. கடைசியில் தொலைபேசி எண்ணை கொடுத்து மனம் மாறினால் மெக்சிகோவிற்கு வந்து தன்னை சந்தி க்கலாம் என்று கூறினார். இந்த சம்பவத்தில் என்னுடைய மொத்த வாழ்க்கையும் அழிந்துவிட்டது'' என கூறினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் தாய் நிறுவனமான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முற்றிலுமாக மறுத்துள்ளது. லெபனான் பெண் சொல்வதில் உண்மையில்லை என்று அந்த துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை சொன்ன பெண் மெக்சிகோவில் உள்ளார். ஆனால் அவரது கணவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால் அவர் தொடர்ந்து டெக்சிஸில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
