திடீர் திடீரென நீல நிறத்தில் மாறும் கால்கள்.. ஏன் இப்படி! கொரோனா ஏற்படுத்தும் கொடூரம்.. எச்சரிக்கை
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு முடிந்துவிட்டதாக நாம் கருதிய நிலையில், அதன் நீண்ட கால பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு முதலில் சீனாவில் கடந்த 2019இல் பரவியது. கொரோனா எப்படித் தோன்றியது என்பது இன்னுமே மர்மமாக இருந்தாலும் கொரோனா பாதிப்பு நம்மை இரண்டு ஆண்டுகள் சுழன்று அடித்துவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு ரொம்பவே ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வேக்சின், தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை காரணமாக இப்போது தான் கொரோனா மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.
கொரோனா வைரஸ்: கொரோனா முடிந்துவிட்டது.. நாம் நமது வேலையைப் பார்க்கலாம் என்று நாம் நினைத்தாலும் கூட கொரோனா நம்மை விடாமல் துரத்துகிறது. லாங் கோவிட் எனப்படும் நீண்ட கால கொரோனா பாதிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது. குறிப்பாக நீண்ட கால கொரோனா இருக்கும் நோயாளியின் கால்கள் வெறும் 10 நிமிடங்கள் நின்றாலே நீல நிறமாக மாறுவதாக தி லான்செட் ஜர்னலில் கூறப்பட்டுள்ளது.
கால்களின் நரம்புகளில் ரத்தம் ஓட்டம் பாதிக்கப்பட்டு ஒரே இடத்தில் தேங்குவதால் கால்கள் நீல நிறத்தில் மாறி இந்த அக்ரோசைனோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 33 வயது நபர் குறித்து இந்த ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது. எழுந்து நின்றாலே வெறும் ஒரு நிமிடத்தில் இவருக்குக் கால்கள் சிவந்து போகிறதாம். மேலும், சில நிமிடங்களில் கால்கள் முழுமையாக நீல நிறமாக மாறுகிறதாம். நேரம் செல்ல செல்ல நரம்புகள் மேலும் மேலும் நீல நிறத்தில் மாறுவதாக இதில் கூறப்பட்டுள்ளது.
நீல நிறத்தில் மாறுகிறது: பத்தே நிமிடங்களில் இவரது கால்கள் முழுமையாக நீல நிறத்தில் மாறுகிறது. கால்கள் கனமானதாக மாறியது போன்ற உணர்வு இவருக்கு ஏற்படுகிறது. மேலும், கால்களில் அரிப்பும் இவருக்கு ஏற்படுகிறதாம். அதேநேரம் உட்கார்ந்த உடன் இரண்டு நிமிடங்களில் நீல நிறம் மறைந்து அவரது கால்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல் அவரது கால்களில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது.
இவருக்கு போஸ்டுரல் ஆர்த்தோஸ்டேடிக் டாக்ரிக்கார்டியா சிண்ட்ரோம் (POTS) என்ற பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எழுந்து நிற்கும் போது இதயத் துடிப்பு அசாதாரண வேகத்தில் அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது. லாங் கோவிட் நமது உடலில் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச பிரச்சினை, செரிமான சிக்கல், நரம்பு மண்டல பிரச்சினை எனப் பல வித பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். இதற்கிடையே இப்போது இந்த பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்பு மோசம்: இதற்கு முன்பு வரை வைரஸ் பாதிப்பால் dysautonomia என்ற பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்தச் சூழலில் இப்போது லாங் கோவிட் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இது கண்டறியப்பட்டுள்ளது கவனிக்க வைப்பதாக மாறியிருக்கிறது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இவர் மட்டுமின்றி லாங் கோவிட் இருக்கும் வேறு சிலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், மக்கள் இப்படி தங்களுக்கு நீல நிறத்தில் கால்கள் மாறுவதால் அச்சமடைகிறார்கள். லாங் கோவிட் பாதிப்பால் இது ஏற்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அதேபோல மருத்துவர்களுக்கும் இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது" என்று அவர் என்றனர். இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
லாங் கோவிட்: கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதன் பிறகும் 4 வாரங்களுக்கு மேலாக அதன் அறிகுறிகள் தொடர்ந்தால் அது லாங் கோவிட் என்று அழைக்கப்படும். லாங் கோவிட் பாதிப்பு காரணமாகச் சோர்வு, மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இது நமது அன்றாட செயல்பாடுகளையும் கூட பாதிக்கும்.. இது நேரங்களில் மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications