டிரம்பை விடுங்க.. மாஜி அமெரிக்க அதிபர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா? வியப்பா இருக்கே
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்கும் நிலையில், தலைநகர் வாஷிங்டனில் இதற்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க இதற்கு முன்பு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் ஒருவரால் அதிகபட்சம் 2 முறை, அதாவது 8 ஆண்டுகள் மட்டுமே அதிபராக இருக்க முடியும். நமது நாட்டை போலக் கடைசி வரை பதவியில் இருக்க முடியாது.

இந்த விதி இருப்பதாலேயே அமெரிக்காவில் புது புது அதிபர்களை அதிகம் பார்க்க முடிகிறது. அதன்படியே டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மாஜி அமெரிக்க அதிபர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மாஜி அதிபர்கள்:
அமெரிக்காவில் இதுவரை 46 அதிபர்களைக் கண்டுள்ள நிலையில், அதில் 41 அமெரிக்க அதிபர்கள் உயிரிழந்துவிட்டனர். டிரம்பை சேர்த்து (2017-2021 வரை ஏற்கனவே அதிபராக இருந்தவர்) 4 மாஜி அதிபர்கள் மட்டுமே உயிருடன் உள்ளனர். அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பில் கிளிண்டன்
இந்த லிஸ்டில் முதலில் வருபவர் பில் கிளிண்டன். 1993 முதல் 2001ம் ஆண்டு வரை அமெரிக்காவின் 42ஆவது அதிபராக இருந்த பில் கிளிண்டனுக்கு இப்போது வயது 77. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டன் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 2001ம் ஆண்டில் கிளின்டன் அறக்கட்டளையைத் தொடங்கினார். அதன் பிறகு சுகாதாரம், காலநிலை நெருக்கடி, மக்களிடையே நிலவும் பாகுபாடு ஆகியவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
2016ம் ஆண்டில் அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், அவருக்கு ஆதரவாகவும் டிரம்ப் பிரச்சாரம் செய்தார். மேலும், கிளிண்டன் சர்வதேச அளவில் ஐநா சபைக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த காலகட்டத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கிப் பல உடல்நிலை சிக்கல்களையும் அவர் எதிர்கொண்டார்.
ஜார்ஜ் புஷ்:
அடுத்த இந்த லிஸ்டில் இருப்பவர் ஜார்ஜ் புஷ். 2001-2009 வரை அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் வயது 77 ஆகும். குடியரசு கட்சியைச் சேர்ந்த புஷ், அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சொந்த வீட்டில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு ரிலாக்ஸாக தனது ஓய்வுக் காலத்தைக் கழித்து வருகிறார். அதேநேரம் அமெரிக்கா எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து ஓபனாக தனது கருத்துகளைக் கூறி வருகிறார்.
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டத் தொடங்கிய புஷ், அதில் கை தேர்ந்தார். தான் வரைந்த படங்களைக் கொண்டு சில புத்தகங்களையும் கூட அவர் வெளியிட்டுள்ளார். இவருக்கும் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. ஜார்ஜ் புஷ்- லாரா புஷ் தம்பதிக்கு 4 பேரக்குழந்தைகள் உள்ளன.
ஒபாமா:
அடுத்து ஒபாமா.. 2009-2017 வரை அதிபராக இருந்த ஒபாமாவுக்கு இப்போது வயது 62. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமா, அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் என்ற சாதனையையும் படைத்தார். ஓய்வுக்குப் பிறகு அவர் 2017இல் ஒபாமா அறக்கட்டளையைத் தொடங்கினார். மேலும், ஒபாமா- மிச்செல் ஒபாமா தம்பதி நெட்பிளிக்ஸ் தளத்திற்காக ஆவணப் படங்களையும் Higher Ground Productions என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வருகிறார்கள்.
மேலும், அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட ஜனநாயக கட்சியில் செல்வாக்கு மிக்க அதிபராகவே ஒபாமா இருக்கிறார். இதன் காரணமாகவே ஒவ்வொரு முறையும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு சமயத்தில் சமயத்தில் ஒபாமா யாருக்கு ஆதரவு தருகிறார் என்பது முக்கியத்துவம் பெறும். இது மட்டுமின்றி அதிபர் தேர்தல் நடக்கும் போதெல்லாம் அவர் எப்போதும் ஜனநாயக கட்சிக்காகத் தீவிரமாகப் பிரச்சாரமும் செய்து வருகிறார்.
டிரம்ப்:
அடுத்து அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப். இவர் ஏற்கனவே கடந்த 2017-2021 காலகட்டத்தில் அதிபராக இருந்தவர். அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு தனது சொந்த பிஸ்னஸில் ஆர்வம் காட்டி வந்தார். அதேநேரம் கடந்த 2022 நவம்பர் மாதமே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்த டிரம்ப், இப்போது அதிபர் தேர்தலிலும் வென்றுள்ளார்.
இப்போது மாஜி அதிபர் லிஸ்டில் பைடனும் சேர்ந்துள்ளார். ஜனநாயக கட்சியின் பைடனுக்கு இப்போது வயது 82. 1973 முதல் 2009 வரை தொடர்ச்சியாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்வான இவர், அதன் பிறகு ஒபாமா அதிபராக இருந்த போது துணை அதிபராகவும் இருந்துள்ளார். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் பைடன், ஓய்வுக் காலத்தை அமைதியாகக் கழிப்பார் என்றே தெரிகிறது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications