Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகின் ஆபத்தான நாடுகள் எதெல்லாம் தெரியுமா? லிஸ்டில் இந்த நாடும் இருக்கா.. நம்பவே முடியலயே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உள்நாட்டு போர், அரசியல் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு உலகின் ஆபத்தான 10 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளை காணலாம்.

உலகில் மகிழ்ச்சியான நாடுகள், ஆபத்தான நாடுகள் உள்ளிட்டவற்றை தரவரிசைப்படுத்தி பட்டியல்களை பல்வேறு அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. ஒருநாட்டில் நிலவும் உள்நாட்டு சூழல், மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில், உலகின் ஆபத்தான நாடுகள் என்பதை சர்வதேச அமைதி குறியீடு (Global peace index) பட்டியலிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள நாடுகளின் விவரங்களை பார்க்கலாம்.

 List of 10 most dangerous countries in the world Russia in 4th place

ஆப்கானிஸ்தான்: ஆசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. தாலிபான்கள் ஆட்சி அமைந்தது முதல் அங்கு பல்வேறு கெடுபிடிகள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான சட்டதிட்டங்களை தாலிபான் ஆட்சியாளர்கள் அமல்படுத்தி வருகின்றனர்.

பெண்கள் உயர் கல்வி கற்க தடை, அழகு நிலையங்களுக்கு செல்ல தடை என அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 3.544 என்ற புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஏமன்: தென்மேற்கு ஆசியாவில் உள்ள நாடு ஏமன். சுமார் 2.2 கோடி மக்கள் தொகை கொண்ட ஏமனில் உள்நாட்டு போரால் கடுமையான குழப்பமான சூழல் நிலவுகிறது. சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதனால், மன்சூர் ஹைதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு ஏமன் அதிபராக அலி அப்துல்லா சாலே பதவி வகித்து வருகிறார். எனினும் அங்கு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபாடில்லை. 8 வருடங்களாக தொடரும் இந்த உள்நாட்டுப் போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா அரசு செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. இதனால், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஏமன் 2-வது இடத்தில் உள்ளது.

சிரியா: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று சிரியா. உள்நாட்டு போரால் கடுமையாக சிரியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் நிலைத்தன்மை மற்றும் மோதல் ஆகியவற்றால் சிரியா கடுமையான பாதிபை சந்தித்துள்ளது. உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் 3.356 புள்ளிகளுடன் சிரியா 3-வது இடத்தில் உள்ளது.

ரஷ்யா: 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் ரஷ்யா 4-வது இடம் வகிக்கிறது. இந்த பட்டியலில் ரஷ்யா இடம் பெற்றது சற்று வியப்பை ஏற்படுத்தினாலும் உக்ரைன் மீது அந்த நாடு தொடுத்துள்ள போரால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. ரஷ்யாவில் அதிகரித்து வரும் கொலைகள் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றால் ரஷ்யா இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. புதினுக்கு எதிராக சர்வதேச அளவிலும் எதிர்ப்புகள் கிளம்பியிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.

தெற்கு சூடான்: இந்த பட்டியலில் 5-வது இடத்தில் தெற்கு சூடான் உள்ளது. 2011 ஆம் ஆண்டு முதலே உள்நாட்டு போர் காரணமாக தெற்கு சூடான் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஆபத்தான நாடுகளில் 6-வது இடத்தில் காங்கோ குடியரசு உள்ளது. இந்த லிஸ்ட்டில் அடுத்த இடங்களில் ஈராக், சோமாலியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+