அமெரிக்காவில் தேர்தல் ஜுரம்.. டிரம்புக்கு சிக்கல்! ரிபப்ளிக் கட்சியில் அணிவகுக்கும் போட்டியாளர்கள்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் டிரம்பின் ரிபப்ளிக் கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இடம்பெற்று இருப்பவர்கள் யார்? அவர்களின் தனி விபரம் குறித்து அலசுவோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தானும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த போட்டியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

List of competitors who trying for Republic party candidate in 2024 US president elections

அதே நேரம் அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் இருப்பதால் குடியரசு கட்சி சார்பில் வேறு வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் டொனால்டு டிரம்பை தவிர்த்து ரான் டி சாண்டிஸ், நிக்கி ஹாலே, மைக் பென்ஸ், டிம் ஸ்காட் உள்ளிட்டோர் பெயர்களும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் உள்ளன.

இவர்களை பற்றிய சிறிய அறிமுகங்களை பார்ப்போம். அந்த வகையில் ரிபப்ளிக் கட்சியின் வேட்பாளர் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் டொனால்டு டிரம்ப். இவரை பற்றி நாம் அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை. காரணம், அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது இவர் செய்த சம்பவங்கள் அப்படி. கடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த இவர், மீண்டும் தேர்தலில் போட்டியிட முனைப்போடு களமாற்றி வருகிறார்.

ரான் டீ சாண்டிஸ்: அமெரிக்காவின் வலதுசாரி ஆதரவு வாக்காளர்கள் மற்றும் குடியரசு கட்சி ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர் டிரம்பின் நடவடிக்கைகளில் வெறுப்படைந்துள்ளனர். அத்தகையோரின் தேர்வாக இருப்பவர், ரான் டீ சாண்டிஸ். 44 வயதான இவர், புளோரிடா மாகாண ஆளுநராக பதவி வகித்து வருகிறார். அமெரிக்க கடற்படையிலும் இவர் பணிபுரிந்து இருக்கிறார்.

மைக் பென்ஸ்: 63 வயதான மைக் பென்ஸ், டொனால்ட் டிரம்பின் நம்பிக்கைக்குரிய கரமாக இருந்தவர். ஆனால், 2021 ஆம் ஆண்டு டிரம்பின் ஆதரவாளர்களை கொண்டு கும்பல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் முன் நிகழ்த்திய தாக்குதலின்போது மைக் பென்ஸுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். ஆர்ஜேவாக இருந்த மைக் பென்ஸ், அமெரிக்காவின் குரலாக மாறுவாரா? விரைவில் விடை கிடைக்கும்.

நிக்கி ஹாலே: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் நிக்கி ஹாலே. இந்திய வம்சாவளியின் மகளான இவர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் ஐநாவுக்காக அமெரிக்காவின் முதல் தூதராக நியமிக்கப்பட்டவர். ரிபப்ளிக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடுவோரின் வரிசையில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் இவர் மட்டும்தான். 51 வயதான நிக்கி ஹாலே, தான் இதுவரை போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியடையவில்லை.

List of competitors who trying for Republic party candidate in 2024 US president elections

டிம் ஸ்காட்: பால்மெட்டோ மாகாணத்தின் செனட்டரான டிம் ஸ்காட், ரிபப்ளிக் கட்சியின் முதல் கருப்பின அதிபர் வேட்பாளராகும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் செனட்டராக தேர்வு செய்யப்பட்டவுடன், தனது தாத்தா எப்படி பராக் ஒபாமாவுக்கு வாக்களித்தார் என்பதை இவர் விளக்கினார். "மீண்டும் ஒரு கருப்பினத்தவர் அமெரிக்க அதிபராக வேண்டும். அவர் ரிபப்ளிக் கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும்." என்றார்.

அதேபோல். அர்கன்சாஸ் முன்னாள் ஆளுநர் அசா ஹட்சின்சன், வலதுசாரி ரேடியோ பிரபலம் லாரி எல்டர், தொழிலதிபரும், இந்திய வம்சாவளியுமான விவேக் ராமசாமி உள்ளிட்டோரும் ரிபப்ளிக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+