உலகத்திலேயே சொந்தமாக அதிக நிலம் வைத்திருப்பவர்கள் லிஸ்ட்! முதலிடத்தில் யார் இருக்கான்னு பாருங்க
வாஷிங்டன்: ஒருவரின் செல்வாக்கு வசதி ஆகியவற்றை அவர்கள் வசம் உள்ள சொத்து மதிப்பே பெரும்பாலும் நிர்ணயிக்கிறது. பல நூறு ஏக்கர் சொத்துக்களுடன் ஊரில் பெரும் செல்வந்தர்களாக வலம் வரும் நபர்களை இன்றளவும் பார்க்க முடிகிறது. உலக அளவில் அதிக சொத்துக்கள் வைத்திருப்பது என்று உங்களுக்கு தெரியுமா? அது பற்றிய விவரங்களைத்தான் இங்கே பார்க்க போகிறோம் .
மனிதன் விவசாயம் செய்ய தொடங்கிய காலத்தில் இருந்துதான் நிலத்தை உரிமை கொண்டாடும் பழக்கம் தொடங்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மன்னர்கள் ஆண்ட காலத்திலும் ஒரு மன்னருடைய பலம் அவர் ஆட்சி செய்யும் நிலப்பரப்பை வைத்தே கணக்கில் கொள்ளப்பட்டது. இப்படி அந்த காலம் முதல் இந்த காலம் வரை மனிதனுக்கு நிலத்தின் மீதான ஈர்ப்பு குறையவே இல்லை.

பெரும் பணக்காரர்கள் முதல் நடுத்தர மக்கள் வரை தங்களால் முடிந்த அளவுக்கு நிலங்களில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது. உலகம் முழுவதுமே ஒருவருடைய செல்வம், அதிகாரத்தை காட்டும் ஒன்றாக நிலம் இன்றளவும் திகழ்கிறது. உலக அளவில் யாரிடம் அதிக நிலம் உள்ளது என்று நீங்கள் யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? சர்வதேச அளவில் யார் வசம் அதிக நிலம் உள்ளது என்ற லிஸ்டை பார்க்கலாம்...
பிரிட்டிஷ் அரச குடும்பம்: இந்த பூமியிலேயே அதிக நிலம் வைத்து இருப்பது யார் என்றால் பிரிட்டன் மன்னர் குடும்பம் தான். உலகம் முழுவதும் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களிடம் இவ்வளவு சொத்துக்கள் இருப்பது பெரிதாக ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என நினைப்பது தெரிகிறது. இங்கிலாந்து அரச குடும்பத்த சேர்ந்த, தற்போது மன்னராகவுள்ள சார்லசிடம் சுமார் 660,00,00,000 ஏக்கர் நிலம் இருக்கிறதாம். இந்த நிலங்கள் அனைத்தும் கிரேட் பிரிட்டன், ஆஸ்திரியா, அயர்லாந்து ஸ்காட்லாந்து வேல்ச், கனடா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் பரந்து விரிந்து கிடக்கின்றன. இந்த பூமியின் மொத்த செல்வத்தில் 16.6 சதவிகிதம் பிரிட்டன் மன்னர் குடும்பத்திடமே உள்ளது.
கத்தோலிக்க திருச்சபை: இந்த பட்டியலில் இரண்டாம் படத்தில் கத்தோலிக்க திருச்சபை உள்ளது. கத்தோலிக்க திருச்சபையிடம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளையும் சேர்த்து 17,70,00,000 ஏக்கர் நிலம் உள்ளதாம். இந்தியாவில் கூட இந்திய அரசுக்கு அடுத்தபடியாக அதிக நிலங்கள் கத்தோலிக்க திருச்சபையிடம் தான் உள்ளது.
இது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தேவாலயங்கள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் என அதிக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கொண்டுள்ளது. இதன் மதிப்பு தோராயமாக சுமார் 20 ஆயிரம் கோடி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
நுனாவட்டின் இன்யூட் மக்கள்: இந்த லிஸ்ட்டில் மூன்றாம் இடம் பெற்றிருப்பது யார் என்று பார்த்தால் நுனாவட்டின் இன்யூட் மக்கள் உள்ளனர். கனடாவில் 87.5 மில்லியன் ஏக்கர் இவர்களுக்கு சொந்தமாக உள்ளதாம். 1993-ல் ஒப்பந்தத்தின்படி, கனடா அரசாங்கத்தால் இந்த நிலம் இன்யூட் மக்கள் வசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஜினா ரைன்ஹார்ட்: ஆஸ்திரேலியாவில் சுரங்க அதிபராக உள்ள ஜினா ரைன்ஹார்ட்டிடம் அதிகம் உள்ளது. ஆஸ்திரேலியாவின் பெரும் தொழில் அதிபராகவும் பணக்காரராகவும் உள்ள இவருக்கு சொந்தமாக 23.97 மில்லியன் ஏக்கர் நிலங்கள் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இவருக்கு சொந்தமான சுரங்கங்கள் உள்ளன.
5வது இடம்: லிஸ்ட்டில் 5- வது இடத்தில் இனுவியாலூயிட் மக்கள் உள்ளனர். கனடாவில் 22.49 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பு இவர்கள் வசம் உள்ளது. 1984 ஆம் ஆண்டு இனுவியலுட் இறுதி ஒப்பந்தத்தில் இந்த நிலம் இவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
சீனாவில் உள்ள முடான் ஜியாங்க் சிட்டி மெகா பண்ணை இந்த லிஸ்டில் 6- வது இடம் பெற்றுள்ளது.
22.24 மில்லியன் ஏக்கர் நிலம் இந்த பண்ணையிடம் உள்ளது. உலகின் மிகப்பெரிய கால்நடை பண்ணையாக இது உள்ளது. இந்த பண்ணையில் 1,00,000-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் உள்ளன.
ஆஸ்திரேலிய விவசாய நிறுவனம்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த விவசாய நிறுவனம் இந்த லிஸ்டில் 7- வது இடத்தில் உள்ளது . 17.3 மில்லியன் ஏக்கர் பரப்பளவு இந்த நிறுவனத்திடம் உள்ளது. யுனிட்டைடு கிங்க்டமின் பணக்காரர்களில் ஒருவரான ஜோ லூயிஸ் இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக உள்ளார்.
வடக்கு ஆஸ்திரேலிய பஸ்ட்ரோல் நிறுவனம்: உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று வடக்கு ஆஸ்திரேலிய பஸ்டோரல் நிறுவனம். 1877 நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வசம் 14.8 மில்லியன் நிலம் உள்ளது. உலகில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் இந்த நிறுவனம் 8-வது இடத்தில் உள்ளது. அதே போல 9-வது இடத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜம்பக் பஸ்ட்ரோல் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியிடம் 14.2 மில்லியன் ஏக்கர் நிலங்கள் உள்ளன.
10-வது இடத்திலும் ஆஸ்திரேலிய நிறுவனம்தான் உள்ளது ஆஸ்திரேலியாவின் ஹண்ட்பரி குழுமத்திடம் 13 மில்லியன் ஏக்கர் நிலம் உள்ளது . தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் பல லட்சம் ஏக்கர்கள் பரந்து விரிந்து உள்ளன.












Click it and Unblock the Notifications