பசி, பட்டினி.. ஏழ்மையில் தள்ளாடும் நாடுகள் பட்டியல் வெளியீடு.. முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?
வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐஎம்எப் உலகில் வறுமையில் தாண்டவம் ஆடும் நகரங்களின் பட்டியலை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் தெற்கு சூடான் நாடு உள்ளது.
எந்த ஒரு நாட்டிற்கும் வறுமை என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். மேலும் உலகின் பல நாடுகள் அதனுடன் போராடி வருகின்றன. குறிப்பாக வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு வறுமையை ஒழிப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. உலக அளவில் பணக்கார நாடுகள், செல்வாக்கு மிக்க நாடுகளின் பட்டியலிடப்படுவது போது வறுமை தாண்டவம் ஆடும் நாடுகளின் அவ்வப்போது வெளியிடப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐஎம்எப் உலகில் வறுமையில் தாண்டவம் ஆடும் நகரங்களின் பட்டியலை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்களின் அன்றாட தேவைகளுக்காக செலவிடப்படும் தொகை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. வாழ்கை தரம், மக்களின் வாங்கும் சக்தி உள்ளிட்டவையும் இதற்கான அளவீடுகளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் இடத்தில் தெற்கு சூடான்: போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் தெற்கு சூடான் நாடு முதலிடத்தில் உள்ளது. தெற்கு சூடானில் ஜிடிபி தனிநபர் வருமானம் என்பது $492.72 ஆக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற தெற்கு சூடான், உலகின் மிக இளமையான நாடாக அறியப்படுகிறது. அரசியல் நிலைத்தன்மை, உள்நாட்டு சண்டை, உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லாமை போன்றவற்றால் அந்த நாட்டின் வளர்ச்சி கடுமையாக திண்டாடி வருகிறது.

இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள நாடுகள் எவை எவை என்பதனை இங்கே பார்ப்போம். 2- ஆம் இடத்தில் புருண்டி உள்ளது. அதனைத்தொடர்ந்து, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, மொசாம்பிக், மாலாவி, நைகர், சாட், லைபிரியா, மடகாஸ்கர், என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் உள்ள நாடுகள் பெரும்பாலானாவை ஆப்பிரிக்க நாடுகள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
அடிப்படை பிரச்சினைகள்: ஏழ்மையான நாடுகளாக இருக்கும் இந்த நாடுகளில் பெரும்பாலும் பொதுவான பிரச்சினைகளே உள்ளன. அரசியல் நிலைத்தன்மை, உள்நாட்டு மோதல், உள்கட்டமைப்பு சரிவர இல்லாதது, பருவமழையை எதிர்பார்த்தே விவசாயத்தை நம்பியிருப்பது ஆகியவையே நாடுகள் கடுமையான வறுமையை எதிர்கொள்ள காரணமாக உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக தட்ப வெப்பநிலையில், மாற்றம் ஏற்படுவதால் உணவு பாதுகாப்பு என்பதும் இங்கு கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நாடுகளில் நிலவும் வறுமை, அங்குள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இந்த அறிக்கை உள்ளது. உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வது, பொருளாதார பன்முகத்தன்மையை ஊக்குவித்தல், அரசியல் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது ஆகியவையே இந்த நாடுகளை பிரகாசமான வளர்ச்சியை உருவாக்கும் முக்கிய நடவடிக்கையாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications