தலைவிதியை மாற்றிய பிறந்த நாள்.. லாட்டரியில் கோடி கோடியாய் அள்ளிய நபர்! அதிர்ஷ்டம்னா இதுதான் போல

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அதிர்ஷ்டம் என்றால் கூரையை பிய்த்துக்கு கொண்டு கொட்டும் என்பது போல, அமெரிக்காவை சேர்ந்த நபருக்கு ரூ.9.5 கோடி லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது. தனது டேட் ஆஃப் பர்த் கொண்ட லாட்டரி எண்ணை எதேச்சையாக கடையில் பார்த்த அவர் ஸ்காராட் செய்து பார்த்து இருக்கிறார். இதில் 9.5 கோடி பரிசு அடித்ததால், மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளார். நெட்டிசன்களும், "அதிர்ஷ்டம் வீடு தேடி வந்து கதவை தட்டும் என்பது இதுதான் போல" என ஜாலியாக தெரிவித்துள்ளனர்.

அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என்றே தெரியாது என்று சொல்வதை கேள்வி பட்டு இருப்போம். இது உண்மையோ, இல்லையோ.. லாட்டரிகளுக்கு பரிசு அடிப்பவர்களுக்கு இது 100 சதவீதம் பொருந்தும் எனலாம். வாழ்நாள் முழுக்க லாட்டரி வாங்கி ஒரு ரூபாய் கூட பரிசு அடிக்காமல் பணத்தை இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

Lottery prize American Man wins Rs 9 Crore in Lucky Number 7 his Date of Birthday

லாட்டரியில் 9.5 கோடி பரிசு

ஆனால் ஒரு சிலருக்கு வாங்கிய முதல் டிக்கெட்டிலேயே பல கோடி பரிசு அடித்து வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத திருப்பம் ஏற்பட்டுவிடும். லாட்டரியில் பரிசு அடிப்பதற்கு எல்லாம் எந்த திறமையும் தேவையில்லை.. வெறும் குருட்டு அதிர்ஷ்டம் போதும் என்று சொன்னாலும் கூட சிலர் தங்களின் அதிர்ஷ்ட எண் எனக்கருதி குறிப்பிட்ட எண்களை வைத்து வாங்கும் போது எதிர்பாராத விதமாக பரிசு அடித்து விடுகிறது.

அப்படியான ஒரு நிகழ்வுதான் அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் முனோஸ் என்பவருக்கு நடந்துள்ளது. தனது பிறந்த நாள் மற்றும் பிறந்த வருடத்தை வைத்து அவர் வாங்கிய லாட்டரி ஒன்றிற்கு சுமார் 9.5 கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளதாம். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த நிகழ்வு பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

777 என்ற எண்ணுக்கு அடித்த பரிசு

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் தாமஸ் முனோஸ். லாட்டரிகள் வாங்கும் பழக்கம் கொண்ட இவர் அங்குள்ள கடை ஒன்றில் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். தனது பிறந்த ஆண்டு 1977 மற்றும் 7 ஆம் தேதி என்பதால், அதிர்ஷ்ட எண்ணாக இதனை கருதி 777 என்ற எண்ணில் முடியும் டிகெட்டை வாங்கியுள்ளார். இதுவரை வாங்கிய டிக்கெட்டிற்கு பரிசு இல்லை.. இதற்காவது அடிக்குமா? என காத்திருந்தவருக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.

ரூ.9 கோடி பரிசு அடித்த நிலையில், அதுபற்றி உற்சாகம் பொங்க தாமஸ் கூறியதாவது:- நான் 7 ஆம் தேதி 1977 ஆம் ஆண்டு பிறந்தேன். எதேச்சையாக டிரிபிள் ரெட் 777 டிக்கெட்டில் அந்த எண்ணை கடை ஒன்றில் பார்த்தேன். ஆனால் இந்த டிக்கெட் எனது தலைவிதியை மாற்றிவிட்டது. கடையில் வைத்தே நான் அந்த டிக்கெட்டை ஸ்க்ராட்ச் செய்து பார்த்தேன். பரிசு விழுந்தது தெரிந்ததும், உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது" என்றார்.

நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்

சமூக வலைத்தளங்களில் வைரால பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையாகவும் ஜாலியாகவும் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், 'அதிர்ஷ்டம் வீடு தேடி வந்து கதவை தட்டும் என்பது இதுதான் போல.. உண்மையாகவே ரொம்ப லக்கிதான்' என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "யாரோ ஒருவருக்கு பரிசு அடிக்க எத்தனை லட்சம் பேர் ஏமாற வேண்டியுள்ளது. லாட்டரிகள் என்பதே வீணான ஒன்று. இதில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+