நடுவானில் குலுங்கிய விமானம்..பறந்த காகிதங்கள், உணவு பொருட்கள்.. பீதியில் உறைந்த பயணிகள்! திக் திக்
அமெரிக்காவின் லுப்தான்சா விமானம் கடுமையான டர்புலன்ஸில் சிக்கி பயங்கரமாக குலுங்கியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் லுப்தான்சா விமானம் கடுமையான டர்புலன்ஸில் சிக்கி பயங்கரமாக குலுங்கியுள்ளது. இதில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் அடி வேகமாக விமானம் கீழே இறங்கியதால் பயணிகள் வைத்திருந்த சில பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் எல்லாம் விமானம் முழுவதும் சிதறியுள்ளது. மேலும் பயணிகள் 7 பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.
விமான பயணம் என்பது சொகுசு பயணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சாலை மற்றும் ரயில் பயணத்தை விட மிக விரைவாக குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று விட முடியும் என்பதால் விமான பயணத்தை பெரிதும் விரும்பும் பயணிகளும் இருக்கிறார்கள்.
விமான பயணங்களை பொறுத்தவரை விமானங்கள் நடு வானில் பறக்கும் போது சில நேரங்களில் டர்புலன்ஸில் (Turbulance) சிக்கிக் கொள்வதுண்டு.

டர்புலன்ஸ்
விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வானிலையில் ஏற்படும் மாற்றத்தால் காற்று மாறி மாறி வீசி விமானம் ஆட்டம் காண தொடங்கும். பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் காற்றின் தன்மைக்கு ஏற்ப தடம் மாற துவங்கும். இதைத் தான் டர்புலன்ஸ் என அழைக்கிறார்கள். விமானம் நடுவானில் டர்புலன்ஸில் சிக்குவது என்பது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய விஷயம் தான். இந்த டர்புலன்ஸ் ஏற்படும் போது விமானத்திற்குள் இருக்கும் பயணிகளும் கடுமையாக ஆட்டம் காண வைக்கும்.

பயணிகள் பீதி
விமானத்தில் வைக்கப்பட்டு இருக்கும் பொருட்கள் பயணிகள் மீது விழ வாய்ப்புள்ளது. பயணிகளே விமானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மோதி காயமடைய வாய்ப்பு உள்ளது. விமானங்கள் வானில் செல்லும் போது சில நேரங்களில் டர்புலன்ஸில் (Turbulance) சிக்குவது உண்டு. இது வழக்கமானது என்றாலும் சில நேரங்களில் கடுமையாக விமானம் குலுங்கி பயணிகளுக்கு காயத்தை ஏற்படுத்தி விடும். இதனால், விமானப் பயணத்தில் டர்புலன்ஸ் என்றாலே பயணிகளுக்கும் பெரும் பீதிதான் என்று சொல்ல வேண்டும்.

நடுவானில் குலுங்கிய விமானம்
இந்த நிலையில், அமெரிக்காவின் லுப்தான்சா விமானம் அண்மையில் கடுமையான டர்புலன்ஸில் சிக்கி பயங்கரமாக குலுங்கியுள்ளது. இதில் விமானம் கிட்டத்தட்ட 4 ஆயிரம் அடி வேகமாக கீழே இறங்கியுள்ளது. பயணிகள் வைத்திருந்த சில பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் எல்லாம் விமானம் முழுவதும் சிதறியுள்ளது. பயணிகள் 7 பேருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக வாஷிங்டன் டிசியில் உள்ள டல்லெஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

தயவு செய்து அழித்து விடுமாறு
விமானம் தரையிறங்கும் முன்பாக டர்புலன்சின் போது விமானம் குலுங்கியது மற்றும் அதனால் விமானத்திற்குள் உணவுப் பொட்டலங்கள், பயணிகளின் தனிப்பட்ட பொருட்கள் போன்றவை சிதறிக்கிடக்கும் காட்சிகளை செல்போனில் எடுத்து இருந்தால் அதை தயவு செய்து அழித்து விடுமாறு விமான ஊழியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். பயணிகளின் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாக்கும் பொருட்டு இப்படி செய்ததாக விமான நிறுவனமும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் பரவும் காட்சிகள்
எனினும், விமானத்தில் டர்புலன்ஸில் சிக்கிய பிறகு விமானத்தின் உட்பகுதி பொருட்கள் சிதறிக்கிடப்பது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவிட்டன. கேபின் தரைப்பகுதி முழுக்க உணவு பொருள், காகிதம் உள்ளிட்டவை கிடக்கின்றன. இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
அவசரமாக வான் வழியை மூடிய ஈரான்! முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்.. தாக்குதல் திட்டமிடும் டிரம்ப்! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
"திறக்கப்படும் ஹார்முஸ்.." முடிவுக்கு வரும் அமெரிக்கா ஈரான் போர்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு! -
"நான் தான் இயேசுவின் அவதாரம்.." வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு.. அடுத்த நொடி நடந்த பயங்கரம்! -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட்












Click it and Unblock the Notifications