வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 கூல் டிரிங்க்ஸை ஒரே அடியாக குடித்த இளைஞர்! கணையம், கல்லீரல்,கிட்னி.. வரிசையாக நடந்த பகீர் சம்பவம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூப் கேமர் ஒருவர் செய்த செயல் அவரது உடலை மிக மோசமாகப் பதம் பார்த்துவிட்டது.

இந்த இணைய உலகத்தில் எல்லாமே டிரெண்டிங் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படுகிறது. டிரெண்டிங்கில் வரப் பலரும் இங்குப் பல விதமான வினோதமான மற்றும் ரிஸ்கான வேலைகளைச் செய்கிறார்கள்.

சில நேரங்களில் அவர்கள் செய்யும் செயல்களே அவர்களுக்கு எதிராக அமைந்துவிடுகிறது. இதனால் பலருக்கும் கூட உயிரிக்கே ஆபத்து கூட ஏற்படுகிறது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

ஃபீல் பண்ணாதீங்க! மாஸ் என்ட்ரி கொடுப்பேன்! கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ஃபீல் பண்ணாதீங்க! மாஸ் என்ட்ரி கொடுப்பேன்! கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்

அமெரிக்கா

அமெரிக்கா

இந்தப் பட்டியலில் இப்போது மற்றொரு நபரும் இணைந்து இருக்கிறார். இணையத்தில் புட் சேலஞ் எப்போதும் கவனத்தை ஈர்க்கும். இந்த கேமரும் அதில் தான் சம்பவம் செய்துள்ளார். கூல் டிரிங்ஸ்களை வேகமாகக் குடிப்பது எப்போதுமே சரியான யோசனையல்ல. பலருக்கும் கூல் டிரிங்ஸை வேகமாகக் குடித்தால் மூச்சுத்திணறல் ஏற்படும். ஒரு கூல் டிரிங்ஸை வேகமாகக் குடித்தாலே இந்த நிலைமை தான்.

 12 எனர்ஜி டிரிங்க்ஸ்

12 எனர்ஜி டிரிங்க்ஸ்

இப்படியிருக்கும் போது, கேமர் ஒருவர் 12 எனர்ஜி டிரிங்க்ஸை குடித்துள்ளார். அதுவும் வெறும் 10 நிமிடங்களில்.. அதாவது 36 வயதான அந்த கேமர் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே ஒரு எனர்ஜி டிரிங்ஸை குடித்து உள்ளார். இருப்பினும், உடன் வேலை செய்பவர்களை இம்பிரஸ் செய்ய அவர் எனர்ஜி டிரிங்க்ஸ்களா குடித்துத் தள்ளி இருக்கிறார். ஆனால், இப்படி மின்னல் வேகத்தில் குடித்தது அவரது உடலையே பதம் பார்த்துவிட்டது.

 உடல்நிலை பாதிப்பு

உடல்நிலை பாதிப்பு

என்ர்ஜி டிரிங்க்ஸில் இருந்த அதிக அளவு சர்க்கரை, காஃபின் மற்றும் ரசாயனங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அவரது கணையம் லீக் ஆக தொடங்கி உள்ளது. எனர்ஜி டிரிங்க்ஸ்கள் இப்போது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது தான் என்றாலும் கூட அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் எவ்வளவு மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கு இவரது கேஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

இது தொடர்பாக மருத்துவர் ஒருவர் கூறுகையில், "ஜெஎஸ் என்ற அந்த நபர் ஆபீஸில் 12 எனர்ஜி டிரிங்க்ஸை 10 நிமிடங்களில் குடித்துள்ளார். இருப்பினும், உடனே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. வலியை மறக்க அவர் வீடியோ கேம் விளையாடத் தொடங்கி உள்ளார். இருப்பினும் வயிற்று வலியும், முதுகு வலியும் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதனால் வலியைப் போக்க அவர் கொஞ்சம் மது குடித்துள்ளார். அப்போது தான் ஒரே அடியாக அவருக்கு வாந்தியும் வந்து இருக்கிறது.

 சாப்பிடக் கூட முடியவில்லை

சாப்பிடக் கூட முடியவில்லை

அதன் பின்னர் அவரால் எதையும் சாப்பிடவே முடியவில்லை. இதையடுத்து மறுநாள் மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஹைப்பர் கிளைசீமியா இருப்பது கண்டறியப்பட்டது.. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் ஏற்படும். ஆனால், இந்த ஒரு பிரச்சினை மட்டும் அவருக்கு ஏற்படவில்லை. அடுத்தடுத்து எடுக்கப்பட்ட மருத்துவ டெஸ்டகளில் பகீர் முடிவுகள் வந்துள்ளது.

 உடம்பே போச்சு

உடம்பே போச்சு

ரத்தத்தில் அதிக கொழுப்பு இருப்பதால் ஏற்படும் ஹைப்பர்லிபேசீமியா நோயும் அவருக்கு ஏற்பட்டது. மேலும், அவரது கணையம் கசிந்து கொண்டிருந்தது. இது இத்துடன் முடிந்துவிடவில்லை. சில நாட்களில் அவர் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது நிலைமை மோசமடையவே தொடங்கி இருக்கிறது. அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்தது மற்றும் அவருக்கு ரத்த தொற்று ஏற்பட்டது. இதனால் மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வார்னிங்

வார்னிங்

எப்போதும் எனர்ஜி டிரிங்க்ஸ்களை எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாகப் போனாலும் கூட மிகப் பெரிய பிரச்சினை ஏற்படும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். எனவே, நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் எனர்ஜி டிரிங்க்ஸை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று தெரிவித்தார்.

English summary
Man's Health is affected to core as he drank 12 energy drinks in 10 minutes: Side effects of drinking more energy drinks in shorter time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X