"சுய இன்பம்.." ஸ்ட்ரிக்ட்டாக தவிர்த்த இளைஞர்! 3 மாசத்துல பயங்கர மாற்றம்! தெரிஞ்சா ஷாக் ஆவிங்க!
வாஷிங்டன்: சுமார் 3 மாதங்களாக சுய இன்பம் செய்யாத இளைஞர் ஒருவன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
சுய இன்பம் குறித்து இணையத்தில் பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவது தொடர்கதையாகி வருகிறது. சுய இன்பம் தவறான பழக்கம் இல்லை என மருத்துவர்கள் கூறும் போதிலும் இதுபோன்ற கருத்துகள் பரவுகிறது.
இப்படிப் பரவும் பொய்யான கருத்துகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், அதை வைத்து லேகியம் விற்பதாகக் கூறி மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த விஷயங்களில் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்பதே சிறந்தது.

சுய இன்பம்
இதற்கிடையே ரெட்டின் தளத்தில் இளைஞன் ஒருவர் 3 மாதங்கள், அதாவது 90 நாட்கள் சுய இன்பம் செய்யாமல் இருந்த போது தனது வாழ்க்கை எப்படி மாறியது என்பது குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளார். சுய இன்பம் செய்யாமல் இருந்ததால் தனது வாழ்க்கை மேம்பட்டதாகவும் இதனால் அதையே தொடர முடிவு செய்துள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்து உள்ளார். அவரது இந்த கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தி உள்ளது.

3 மாதங்கள்
இது குறித்து அந்த நபர் கூறுகையில், "நான் 3 மாதங்கள் வரை சுய இன்பம் செய்யவில்லை என்பதைக் கவனிக்கவே இல்லை. ஏனென்றால் அதை நான் பெரிதாகக் கவனிக்கவில்லை. இதுதான் எனது வெற்றிக்குக் காரணம் என்று கூட நான் நினைக்கிறேன். இந்த காலகட்டத்தில் சில மாற்றங்களை நான் உணர்ந்தேன். அதிக எனர்ஜி எனக்கு இருந்ததை போலவே தோன்றியது. சாதாரண விஷயங்களைக் கூட பாலியல் ரீதியாகப் பார்ப்பதை நிறுத்த முடிந்தது..

எனர்ஜி
எனக்குள் இருந்து ஏதோ ஒரு தவறு சரியாகவிட்டதை போல உணர்ந்தேன். என்னால் மற்றவர்களுடன் எளிதாகப் பழக முடிந்தது. ஜிம்மில் எளிதாக உடற்பயிற்சி செய்ய முடிந்தது. இந்த 3 மாதங்களில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டேன் சுய இன்பம் செய்யாமல் இருந்தது எனக்கு அதிக ஒழுக்கத்தைத் தந்தது. இரவு சீக்கிரம் தூங்கவும் அதிகாலையில் எழுந்திருக்கவும் இது எனக்குப் பெரிதும் உதவியது.

இனி எப்போதும் செய்ய மாட்டேன்
இந்த மாற்றங்களைப் பார்த்த பின்னர் தான் இனிமேல் எப்போதும் சுய இன்பம் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தேன். இதைச் செய்யாமல் இருப்பது எனது வாழ்க்கை மேம்படுத்தப் பெரிதும் உதவியது. இரண்டிற்கும் தொடர்பு இல்லை எனச் சிலர் சொல்லலாம். ஆனாலும், எனது வாழ்க்கை மேம்படுத்த இது உதவியது என்பதே உண்மை. சுய இன்பம் என்ற குறுகிய கால இச்சைக்குப் பலியாகவிடாதீர்கள்..

இரு வேறு கருத்து
உங்கள் பாலியல் ஆசைகளுக்கு அடிமையாக இருக்காதீர்கள்.. உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் வழக்கம் போல ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் கிளம்பி உள்ளன. சிலர் இவரைப் போலவே சுய இன்பத்தைத் தவிர்க்கப் போவதாகக் கூறியுள்ளனர். அதேநேரம் பலர் இதுபோன்ற ஆதாரமில்லாத செய்திகளைப் பரப்புவதே சுய இன்பம் குறித்த தவறான தகவல் பரவ காரணம் எனச் சாடி வருகின்றனர். அவர்கள் பல ஆய்வுகளை மேற்கொள் காட்டியுள்ளனர்.

எதிர்ப்பு
செக்ஸ் வாழ்க்கை மற்றும் சுய இன்பம் என்பது வாழ்க்கையில் புத்துணர்ச்சியைத் தருவதாகவே பெரும்பாலான ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், போலி மருத்துவர்கள் சுய இன்பம் குறித்துச் சொல்வது நம் மனதைப் பாதித்து உடலையும் பாதிக்கிறது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். சுய இன்பம் செய்யாவிட்டால் அங்குச் சேரும் விந்து தானாக நிரம்பி தூக்கத்தில் வெளியேறிவிடும் என்ற மருத்துவர்களின் கருத்தையும் அவர்கள் அங்குப் பதிவிட்டு வருகின்றனர்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications