Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டத்தை மொத்தமாக கலைத்து போட்ட டிரம்ப்! இனி அமெரிக்கரை திருமணமே செய்தாலும் கிரீன் கார்டு கிடைக்காது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டுக் குடிமக்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை வரிசையாக விதித்து வருகிறது. இதற்கிடையே கிரீன் கார்டு பெறும் முக்கியமான வழிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட அமெரிக்கக் குடிமகனை திருமணம் செய்து, அதன் மூலம் கிரீன் கார்டு பெறும் முறையில் டிரம்ப் நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல லட்சம் பேர் அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள். படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு எனப் பல காரணங்களுக்காக அவர்கள் அமெரிக்கா செல்கிறார்கள். அப்படி அமெரிக்கா செல்வோர் எப்படியாவது கிரீன் கார்டு வாங்கிவிடவே துடிப்பார்கள். அதை ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள். இது அமெரிக்கக் குடியுரிமைக்கான பாதையாகவும் பார்க்கப்படுகிறது.

Donald Trump US world

கிரீன் கார்டு

கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்கக் குடிமகன்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்ற போதிலும், பல முக்கிய உரிமைகளை அவர்கள் அனுபவிக்கின்றனர். கிரீன் கார்டு பெறுவதற்குப் பல்வேறு வழிகள் இருக்கிறது. அதில் பலரும் ஷார்ட் கட்டாக பயன்படுத்தும் வழி- திருமணம்! அதாவது அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால் எளிதாக கிரீன் கார்டு கிடைக்கும். இந்த வழியில் பலரும் கிரீன் கார்டு பெறுகிறார்கள்.

இருப்பினும், முறைகேடாக கிரீன் கார்டு பெறவே பலரும் கல்யாணம் செய்து கொள்வதாகப் புகார்கள் எழுந்தன. இந்தச் சூழலில் தான் டிரம்ப் நிர்வாகம் முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது அமெரிக்கக் குடிமகனைத் திருமணம் செய்வதால் மட்டுமே இனி கிரீன் கார்டுக்கு கிடைத்துவிடாது என்று குடியேற்ற வழக்கறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பெரிய சிக்கல்

அமெரிக்கக் குடியுரிமைச் சட்டத்தின்படி அமெரிக்கக் குடிமகன் ஒருவரின் பார்ட்னர் "immediate relative of a US citizen" என்ற பிரிவின் கீழ் வருகிறார். அமெரிக்கச் சட்டப்படி, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஒருவரின் கணவன் அல்லது மனைவி கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படும். இதில் தான் டிரம்ப் நிர்வாகம் இப்போது மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

மோசடி திருமணம்

இது தொடர்பாக அமெரிக்கக் குடியேற்ற வழக்கறிஞர் பிராட் பெர்ன்ஸ்டீன் கூறுகையில், "திருமணம் நடந்திருந்தாலே கிரீன் கார்டு கிடைக்கும் என அர்த்தமில்லை. திருமணம் அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களை டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஆய்வு செய்கிறது. கிரீன் கார்டு பெற மட்டும் மோசடி திருமணம் செய்துள்ளனரா அல்லது அவர்கள் நிஜமான தம்பதி தானா என்பதை ஆய்வு செய்கிறார்கள். இதற்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இனி வெறுமன ரிலேஷன்ஷிப்பில் இருப்பதால் மட்டும் கிரீன் கார்டு கிடைத்துவிடாது. ஒன்றாக வாழ்வதே கிரீன் கார்டை பெற்றுத் தரும்

ஒன்றாக வசிப்பது முக்கியம்

திருமணத்திற்குப் பிறகு தனித்தனியாக வசிப்பது தெரிய வந்தால் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதாவது கணவன், மனைவி ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால், அவர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க வாய்ப்பு குறைவு. நீங்கள் ஏன் பிரிந்து வாழ்கிறீர்கள் என்பது குடியேற்ற அதிகாரிகளுக்குக் கவலையில்லை.. வேலை, படிப்பு என நிஜக் காரணம் கூட இருக்கலாம். ஆனால், அதை அவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள். ஒன்றாக வசித்தால் மட்டுமே கிரீன் கார்டு கிடைக்கும்!

தினசரி ஒரே வீட்டில் வசிக்கும் தம்பதிகளை மட்டுமே நிஜமாகவே திருமணமானவர்களாகக் குடியேற்ற அதிகாரிகள் கருதுகிறார்கள். எனவே, நீங்கள் தினமும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால் அவர்கள் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்க வாய்ப்பு அதிகம். எனவே, திருமண கிரீன் கார்டு வேண்டுமென்றால், ஒன்றாக வாழுங்கள். அவ்வளவுதான்" என அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+