92 வயதில் 5வது திருமணம்! பிரபல தொழிலதிபருக்கு விரைவில் டும் டும் டும்! மணப்பெண் யார் தெரியுமா
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மீடியா அதிபர் ரூபர்ட் முர்டோக் தனது 92ஆவது வயதில் ஐந்தாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
உலகின் முக்கியமான பிரபல மீடியா அதிபர் ரூபர்ட் முர்டோக்.. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் வால் ஸ்ட்ரீட் தொடங்கிப் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்தாண்டு தான் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

5ஆவது திருமணம்: இதற்கிடையே இந்த முர்டோக் மீண்டும் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.ம 92 வயதானாலும் ரூபர்ட் முர்டோக் காதலிப்பதை நிறுத்தவில்லை. வரும் ஜூன் மாதம் தனது காதலியான எலினா ஜுகோவாவை திருமணம் செய்ய இருப்பதாக முர்டோக் அறிவித்துள்ளார். முர்டாக்கிற்கு இது 5ஆவது திருமணமாகும். அவர் இதற்கு முன் நான்கு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு தான் முர்டேக் பல் மருத்துவர் ஆன் லெஸ்லி ஸ்மித் என்பவரைத் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார். சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த அவர்கள் நிச்சயதார்த்தமும் கூடச் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து ஒரே மாதத்தில் திருமணத்தை நிறுத்துவதாக முர்டேக் அறிவித்தார். ஆனால், அதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
யார் இவர்: இந்தச் சூழலில் தான் இப்போது அவர் எலெனா ஜுகோவா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். எலெனா ஜுகோவா ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒரு பயாலஜிஸ்ட். இவருக்கு வயது 67. அதாவது இருவருக்கும் இடையே சுமார் 25 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கிறது. இந்த எலெனா ஜுகோவாவின் மகள் டாஷா ஜுகோவா கலைத் துறையில் ஆர்வம் கொண்டவர். அவர் ரஷ்ய அரசுடன் நெருக்கமாக இருக்கும் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இப்படி தனது மகளுக்கே திருமணமாக பிறகு தான் எலெனா ஜுகோவா ரூபர்ட் முர்டோக்கை மறுமணம் செய்கிறார். இவர்களின் திருமணம் முர்டோக்கின் கலிபோர்னியா திராட்சைத் தோட்டத்தில் நடக்கும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு முர்டோக் ஜெரி ஹால் என்ற மாடலை 4ஆவது திருமணம் செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், இப்போது ஐந்தாவது திருமணம் செய்து கொள்ள ரெடியாகிறார் முர்டோக்.
4 திருமணங்கள்: முர்டோக் தனது முதல் மனைவியான ஆஸ்திரேலியா விமானப் பணிப்பெண் பாட்ரிசியா புக்கர். இந்த ஜோடி1960களில் விவகாரத்து செய்தன அவரும் அவரது இரண்டாவது மனைவியான அன்னா டோர்வ், ஒரு செய்தியாளர். இருவரும் 30 ஆண்டுகள் ஒன்றாக இருந்த நிலையில் செய்தித்தாள் நிருபரும், 1999 இல் விவாகரத்து செய்வதற்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக இருந்தனர். வெண்டி டெங்குடனான அவரது மூன்றாவது திருமணம் 2013இல் முடிவுக்கு வந்தது.
தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஃபாக்ஸ் நியூஸ் தொடங்கி சர்வதேச அளவில் பல முக்கிய நிறுவனங்களைத் தனது கைகளில் வைத்திருப்பவர் தான் முர்டோக்.. அவர் உலக பணக்காரர்கள் லிஸ்டிலும் டாப் 100க்குள் வருகிறார். 92 வயதாகும் முர்டோக் தான் இத்தனை காலமாக அவரது மீடியா நிறுவனங்களைக் கவனித்து வந்தார். கடந்த நவ. மாதம் தான் அந்த பொறுப்பை அவர் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். ஓய்வுக்குப் பிறகு ரிலாக்ஸ் செய்யப் போகிறார் எனப் பார்த்தால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பில்லை கேட்ட நோயாளி.. ரூ.1 லட்சத்தில் இருந்து சரிபாதியாக குறைந்த கட்டணம்! ஏமாந்துடாதீங்க மக்களே -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications