இனி தான் ஆட்டமே! இந்தியருக்கு மிக முக்கிய பதவியை கொடுத்த எலான் மஸ்க்! யார் இந்த நிகில் ராஜ்பால்?
வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் அமெரிக்க அரசின் செயல்திறனை அதிகரிக்கப் போவதாகத் தொடர்ந்து கூறி வந்தார். இதற்காகவே அவர் DOGE என்ற தனித் துறையையும் கூட உருவாக்கி அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமித்தார். இதற்கிடையே எலான் மஸ்க் அந்த துறையில் முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை நியமித்துள்ளார். இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார். கடந்த மாதம் அவர் அதிபரான நிலையில், ஒரு நாள் கூட அவர் சர்ச்சை அறிவிப்பை வெளியிடாமல் இல்லை.

சர்வதேச அளவில் கவனம்:
அதில் முக்கியமானது அவர் உருவாக்கியுள்ள DOGE பிரிவு.. அமெரிக்க அரசின் செயல்திறனை அதிகரிக்க இந்த துறையை உருவாக்கிய டிரம்ப், இதற்கான தலைவராகவும் எலான் மஸ்க்கை அறிவித்தார். அந்த துறையில் நடக்கும் மாற்றங்களும், நியமனங்களும் அமெரிக்காவை தாண்டி சர்வதேச அளவிலும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
இதற்கிடையே எலான் மஸ்க் தனது DOGE பிரிவில் வேலை செய்ய ஆறு பொறியாளர்கள் கொண்ட டீமை தேர்வு செய்திருந்தார்.. ஈதன் ஷோத்ரான், கௌடியர் கோல் கில்லர், கவின், லூக் ஃபரிட்டர், எட்வர்ட் கிறிஸ்டின் மற்றும் ஆகாஷ் பாபா ஆகிய ஆறு பேரை எலான் மஸ்க் தேர்வு செய்திருந்தார். இவர்கள் அனைவருமே 19 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர் நியமனம்:
இதற்கிடையே எலான் மஸ்க் இப்போது தனது டீமை விரிவுபடுத்தி இருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதான நிகில் ராஜ்பால் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். யுசி பெர்க்லி கணினி அறிவியல் மற்றும் வரலாறு படித்துள்ள நிகில் ராஜ்பால் நியமனம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
DOGEஇன் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் அதாவது NOAA என்ற டாஸ்க் போர்ஸில் நிகில் வேலை செய்ய இருக்கிறார். நிகில் இதற்கு முன்னதாக ட்விட்டர் தளத்திலும் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திலும் வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதரவும் எதிர்ப்பும்:
இளங்கலை பட்டம் படிக்கும் போதே, அரசின் அதிகாரம் குறைவாகவும் மார்க்கெட் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவே ஆய்வறிக்கை செய்திருந்தார். இப்போது அதே துறையில் முக்கிய பணிக்கு அவர் வந்துள்ளார். மேலும், நிகில் பிட்காயின் தொடர்பான பிரசன்டேஷன்களை அளிப்பதிலும் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் கடந்த சில காலமாகவே நிகில் பெரியளவில் ஆன்லைனில் எங்கும் ஆக்டிவாக இல்லை.
அவரது நியமனத்திற்குச் சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். DOGE என்பது மிகவும் சிக்கலான துறை.. எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது. அப்படி முடிவெடுத்தால் அது மிக மோசமான சிக்கலை உருவாக்கும். இதனால் முறையான அனுபவம் இல்லாத நிகில் ராஜ்பாலை இந்த துறைக்கு நியமித்தது சரியாக இருக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
டிரம்ப் கட்சி:
டிரம்பின் குடியரசு கட்சி என்பது எப்போதும் ப்ரீ மார்க்கெட் (Free market) என்பதையே ஆதரிக்கும். அதாவது அரசின் தலையீடுகள் குறைவாக இருக்க வேண்டும் என்றும் சந்தையே அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும் என்பதே அவர்கள் நிலைப்பாடு. அதற்காகவே டிரம்ப் தனது அரசின் செலவுகளைக் குறைக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications