டிரம்பின் இரு மனைவிகளுக்கான செட்டில்மென்ட் என்ன?.. மெலானியாவுக்கு அதிக செட்டில்மென்ட் ஏன்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அவரது 3ஆவது மனைவி மெலானியா டிரம்ப் விவாகரத்து செய்தால் ரூ 373 கோடி பெறக் கூடும் என சட்ட நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றி பெற்றார். டிரம்ப் தோல்வியால் அவரது மனைவி மெலானியா கடுங்கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

இதனால் டிரம்பை அவர் விவாகரத்து செய்யவும் கருதுவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் முன்னாள் உதவியாளர் ஓமரோசா மணிகோல்ட் நியூமன் கூறுகையில் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியிலிருந்து வெளியேறுவதை மெலானியா டிரம்ப் ஒவ்வொரு நிமிடமும் எண்ணிக் கொண்டிருக்கிறார்.

மெலானியா

மெலானியா

டிரம்ப் பதவி விலகியது குறித்து மெலானியா விவாகரத்து செய்யலாம் என கூறி இருந்தார். ஆனால் இதுகுறித்து மெலானியா தரப்பில் எதுவும் கூறப்படவில்லை, அவர் மவுனம் காத்து வருகிறார். டிரம்பை மெலானியா பிரிந்தால் அவர் 50 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ 373 கோடி) பெறுவார்.

முதன்மை பராமரிப்பாளர்

முதன்மை பராமரிப்பாளர்

2018-ஆம் ஆண்டில் மெலானியாவுக்கும் டிரம்பிற்கும் இடையிலான தீர்வு என்பது 14 வயது மகனை பொறுத்ததாகும். எனக்கு தெரிந்து முதன்மை பராமரிப்பாளர் யார் என்பது குறித்து அதிக கேள்வி எழுப்பப்படுவதாகத் தெரியவில்லை. என் யூகம் என்னவென்றால், மெலானியாவுக்கு முதன்மைக் காவல் உரிமைகள் கிடைக்கும்.

14 மில்லியன் அமெரிக்க டாலர்

14 மில்லியன் அமெரிக்க டாலர்

டிரம்பின் முதல் இரு மனைவிகளும் முன்கூட்டியே போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி அவரது மனைவிகள் பிரிந்தனர். டிரம்பின் இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவரது முதல் மனைவி இவானா டிரம்பிற்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர், கனெக்டிகட்டில் ஒரு மாளிகை, நியூயார்க்கில் அபார்ட்மென்ட் வழங்கப்பட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+