இன்ஸ்டா + வாட்ஸ்அப்+ பேஸ்புக்.. எல்லாமே ஒரே இடத்தில்.! தெறி வசதியை கொண்டு வரும் மார்க் ஜுக்கர்பெர்க்
வாஷிங்டன்: இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களில் இல்லாத ஒருவரைப் பார்ப்பதே அரிது. ஆனால் ஏகப்பட்ட சமூக வலைத்தளங்கள் இருப்பதால் அதை மேனேஜ் செய்வதே ஒரு வேலையாக மாறிவிட்டது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு கொண்டு வரும் நிலையில், பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் வாட்ஸ்அப் ஆகிய செயலிகளை ஒரே இடத்தில் லிங்க் செய்யும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்போது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவை தான் புகழ்பெற்ற சமூக வலைத்தளங்களாக உள்ளன. ஆனால், இந்த மூன்றையும் மேனேஜ் செய்து, அப்டேட் போடுவதே ஒரு பெரிய வேலையாக இருக்கிறது.

புதிய வசதி:
இந்த பிரச்சினைக்குத் தீர்வாக மெட்டா நிறுவனம் இப்போது புதியதொரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவர் வாட்ஸ்அப் கணக்கை மெட்டாவின் இதர சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உடன் நம்மால் இணைக்க முடியும்.. மெட்டாவில் உள்ள சமூக வலைத்தளங்களில் தடையற்ற எகோசிஸ்டம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மூன்று தளங்களின் கணக்குகளை இணைக்கும் ஆப்ஷனை வழங்க மார்க் ஜூக்கர்பெர்க் முடிவெடுத்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.. அடுத்த சில மாதங்களில் இந்த அப்டேட் படிப்படியாக உலகெங்கும் உள்ள யூசர்களுக்கு வழங்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரே இடம்:
இதன் மூலம் 3 சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஒரே லாகின், மேலும் வாட்ஸ்அப் செயலில் ஸ்டேடஸை பகிர்ந்தால் அது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களிலும் ஒரே நேரத்தில் அப்டேட் ஆவது உள்ளிட்ட வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இதை வாட்ஸ்அப் லிங்க் என்று மெட்டா நிறுவனம் குறிப்பிடுகிறது.
மெட்டா அறிவிப்பு:
இது தொடர்பான அறிவிப்பில், "இந்த வாட்ஸ்அப் லிங்க் சேவை தானாக ஆக்டிவேட் ஆகாது. எனவே, மூன்று கணக்குகளையும் ஒன்றாக இணைக்க வேண்டுமா இல்லையா என்பதை யூசர்களே முடிவு செய்யலாம். ஒருவேளை நீங்கள் லிங்க் செய்ய முடிவு செய்தால் உங்கள் வாட்ஸ்அப் டேட்டா சேவைகளை மேம்படுத்தவும் விளம்பரங்களைக் காட்டவும் பயன்படுத்தப்படும்.
அதேநேரம் யூசர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை இணைத்தாலும் கூட, சாட்கள் மற்றும் அழைப்புகள் முழுமையாக என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டதாகவே இருக்கும். வரும் காலங்களில் மூன்று செயலிகளையும் ஒருங்கிணைத்து இணைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வசதிகள் மேம்படுத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
அக்கவுண்ட் சென்டர்:
மெட்டாவின் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் கணக்குகளை வைத்திருப்போர் அதை ஒரே இடத்தில் ஆக்சஸ் செய்ய Meta's Account Centre என்ற ஒன்றை மெட்டா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கியது. இந்த ஒரு இடத்தில் இருந்தே நாம் மூன்று சமூக வலைத்தளங்களின் செட்டிங்க்ஸ்களையும் மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வாட்ஸ்அப் லிங் மூலம் மூன்று செயலிகளும் இணைக்கப்படும் நிலையில், இதன் மூலம் யூசர்களுக்கு ஒரு மேம்பட்ட சேவையை நம்மால் வழங்க முடியும்.
என்ன செய்ய வேண்டும்:
வாட்ஸ்அப் செயலியை முதலில் அப்டேட் செய்யுங்கள். பிறகு அதில் செட்டிங்ஸ் மெனு என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் Account Centre என ஒன்று இருக்கும். அதில் தான் மூன்று சமூக வலைத்தளங்களையும் லிங்க் செய்வதற்கான செட்டிங்க்ஸ் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு இது காட்டவில்லை என்றால் உங்கள் பிராந்தியத்தில் அந்த ஆப்ஷனை மெட்டா நிறுவனம் இன்னும் அறிமுகப்படுத்தில்லை என்று அர்த்தமாகும்.












Click it and Unblock the Notifications