சூறாவளியின் பாதையை விளக்கிய வானிலை ஆய்வாளர்.. திடீரென பதறி போய் நியூஸ் லைவிலேயே போன் செய்த காட்சி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் புயல் தொடர்பான வானிலை செய்திகளை வழங்குவதை நிறுத்திய தலைமை வானிலை ஆய்வாளர் டோக் கம்மரெர் நேரலையின் போது தனது குடும்பத்தினருக்கு போன் செய்து எச்சரிக்கை விடுத்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் சூறாவளி காற்று வீசி வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து அவ்வப்போது வானிலை அறிவிப்புகளை கொண்டு மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறுவதும் ஜாக்கிரதையாக இருப்பதும் என இருக்கிறார்கள்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய வானிலை நிறுவனம் அமெரிக்காவுக்கான சூறாவளி எச்சரிக்கையை கொடுத்தது. இதை அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவனங்கள் செய்தியாக ஒளிபரப்பி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தன.

நியூஸ் சேனல்

நியூஸ் சேனல்

அது போல் என்பிசி வாஷிங்டன் நியூஸ் சேனலும் வானிலை அறிவிப்புகளை மக்களுக்கு எச்சரிக்கையாக தெரிவித்தன. இதை அந்த நிறுவனத்தின் தலைமை வானிலை ஆய்வாளர் டோக் கம்மரெர் அறிவித்தார். அப்போது அவர் மிக நீளமான வானிலை அறிவிப்பை வெளியிட்டார்.

சூறாவளி பாதை

சூறாவளி பாதை


மேப்பை காண்பித்து அதன் பாதையை விளக்கிக் கொண்டிருந்த டோக்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த சூறாவளி அவரது வீட்டுக்கு அருகே இருந்தது. உடனே அய்யோ என் குடும்பத்தினரை எச்சரிக்க வேண்டும் என பதறினார்.

 போன் செய்த வானிலை ஆய்வாளர்

போன் செய்த வானிலை ஆய்வாளர்

உடனே தனது குடும்பத்தினருக்கு போன் செய்தார். அந்த போனில் அவர் "சூறாவளி நம் வீட்டுக்கு அருகே இருக்கிறது. எனவே எல்லாரும் பாதுகாப்பாக கட்டடத்தின் அடிதளத்திற்கு செல்லுமாறு" தன் மகனிடம் தெரிவித்தார். அவரும் ஓகே டாடி என பதில் அளித்தார். இதையடுத்து தனது பணியான வானிலை அறிவிப்பை தொடர்ந்தார்.

லைவ் ஷோ

லைவ் ஷோ

லைவ் ஷோவில் சூறாவளி குறித்து மக்களுக்கு சொல்லிக் கொண்டிருந்த போதே தனது குடும்பத்தினர் மீதும் டோக் அக்கறை செலுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வெளியான வீடியோ குறித்து டோக் கூறுகையில் ஆமாம் எனது குடும்பத்தினரை எச்சரிக்கை விரும்பினேன்.

எச்சரிக்கை

என் வீட்டில் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். அவர்கள் எனது எச்சரிக்கைகளை டிவியில் பார்த்து தெரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். என்னதான் வெளியே தைரியமாக வானிலையை படித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் எனக்குள் பயம் இருந்தது என டோக் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+