கதறி அழுத ஆபாச நடிகை மியா கலிஃபா.. சொந்த நாட்டை தாக்கியதால் இஸ்ரேலுக்கு எதிராக கொந்தளிப்பு - உருக்கமான வீடியோ
வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையே கடும் மோதல் உள்ளது. இந்நிலையில் தான் லெபனான் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய நிலையில் ஆபாச நடிகை மியா கலிஃபா கண்கலங்கி வீடியோ வெளியிட்டுள்ளார். இஸ்ரேல், அமெரிக்காவை பயங்கரவாத அரசு என விமர்சித்த அவர் இந்த மோதல் என்று முடியும்? என்று கண்கலங்கி உள்ளார்.
ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மியா கலிஃபா. இவர் லெபனான் நாட்டை சேர்ந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் மியா கலிஃபா கதறி அழுது வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும், லெபனான் நாட்டுக்கும் இடையே கடும் மோதல் உள்ளது. இருநாடுகளும் அண்டை நாடுகளாக உள்ளன. மாறி மாறி ஏவுகணை, ட்ரோன்களை வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
மியா கலிஃபா வீடியோ
குறிப்பாக லெபனானை குறிவைத்த இஸ்ரேல் ஆக்ரோஷமாக தாக்கி வருகிறது. தனது சொந்த நாட்டின் மீதான இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மியா கலிஃபா கூறியுள்ளதாவது: ''இன்று நான் ஒரு கடினமான விஷயத்தை பார்த்தேன். கண்முன்னே இனப்படுகொலை நடப்பதை நான் பார்த்தேன். 10 நிமிடங்களில் வான்வெளி வழியாக 160 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
என் நாட்டுக்கு எதிராக..
வரியாக நான் கட்டும் டாலர் என்பது எனது சொந்த நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இதனை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. விவரிக்க வார்த்தைகள் இல்லை. இதுபற்றி மற்றவர்களும் பேச வேண்டும். என்ன நடக்கிறது ஏனென்றால் இந்த தாக்குதல்கள் பயங்கரவாதமாக உள்ளது. என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. எங்கள் மக்களை நிலவை நோக்கியா அனுப்ப முடியும்? மாறி மாறி குண்டு போட்டு கொள்வதை என்னவென்று சொல்வது?
இஸ்ரேல் - அமெரிக்கா பயங்கரவாத அரசு
இது எப்போது நிற்கும். என்னுடைய எண்ணங்கள் அவர்களுடன் உள்ளது. உண்மையாகவே இது என் இதயத்தை நொறுக்கி உள்ளது. நான் அதிர்ஷ்டசாலி.. பாக்கியசாலி ஆனால்.. என் நாடு?'' என்று கண்கலங்கி உள்ளார்.
மேலும் அந்த பதிவில் , ''பயங்கரவாதத்துக்கு சற்றும் சளைக்காத போர் குற்றங்கள் இரண்டு நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் பயங்கரவாத, பாசிச அரசுகளே'' என்று கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறையல்ல..
லெபனானில் பிறந்த மியா கலிஃபா லெபனானுக்கு எதிரான தாக்குதலை கண்டிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் கூட இஸ்ரேல், லெபனானை தாக்கி அழித்தபோது எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதேபோல் காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையையும் அவர் கண்டித்து இருந்தார். தற்போது மியா கலிஃபாவின் இந்த வீடியோவுக்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் எதிராகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் விவாதமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications