ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து".. ஸ்னீக்கர்ஸில் கலக்கல் போட்டோ.. யாரு ஒபாமா ஜோடியா?.. செமல்ல!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: புத்தாண்டு நல்வாழ்த்துகள், அனைவருக்கும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துகள் என்ற வரிகளுடன் தனது கணவர் பராக் ஒபாமாவுடன் எடுத்துக் கொண்ட கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டு மிச்சல் ஒபாமா தெறிக்கவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக 2009 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியில் இருந்தார். அமெரிக்க வரலாற்றில் கருப்பினத்தை சேர்ந்த முதலாவது அதிபர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.

இவரது மனைவி மிச்சல் ஒபாமா. இவர் அதிபரின மனைவி என்பதால் அவரை அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைப்பதுண்டு. இவர்கள் பதவிக் காலம் முடிந்த பிறகும் இணையத்தில் டிரென்டாகியுள்ளார்கள்.

மிச்சல் ஒபாமா

மிச்சல் ஒபாமா

இந்த நிலையில் புத்தாண்டு பிறப்பையொட்டி மிச்சல் ஒபாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கல் பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் பராக் ஒபாமாவுடன் அவர் எடுத்துக் கொண்ட ஃபன் டைம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அனைவருக்கும் எனது சார்பிலும் எனது கணவர் சார்பிலும் புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்பு

அன்பு

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, அன்பு, நல்ல உடல் ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சூப்பரான ஸ்டார் வடிவத்தில் 2022 என எழுதப்பட்ட மூக்கு கண்ணாடிகளை இருவரும் அணிந்துள்ளார்கள்.

ஸ்டைல் கெட்டப்

ஸ்டைல் கெட்டப்

ஒபாமாின் தோள்களில் ஒரு கையை வைத்துக் கொண்டு தனது இடுப்பில் இன்னொரு கையை வைத்துக் கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார் மிச்சல். மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி போல் பார்ப்பதற்கு கண்கள் பட்டுவிடும் அளவுக்கு கொள்ளை அழகில் இருவரும் உள்ளார்கள். அதிலும் பராக் ஒபாமா பிரிண்டட் சாம்பல் நிற சட்டையும் பேன்ட்டும் அணிந்துள்ளார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இந்த புகைப்படத்தை அனைவரும் வரவேற்று வைரலாக்கியுள்ளனர். எனக்கு மிகவும் பிடித்த மிச்சல் ஒபாமாவின் புகைப்படம் என கமென்ட்கள் குவிகின்றன. வரலாற்றில் அழகான நல்ல முதல் தம்பதி என்றால் அது ஒபாமாவும் அவரது மனைவி மிச்சலும்தான் என்கிறார்கள் ரசிகர்கள். ஒபாமாவுக்கு அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்புள்ளது.

கிறங்கடிக்கும் ஜோடி

கிறங்கடிக்கும் ஜோடி

அந்த வகையில் இந்தியாவிலும் இந்த ஜோடியின் புகைப்படம் இணையத்தை கிறங்கடித்து வருகிறது. ஒபாமாவுக்கு இந்தியாவை மிகவும் பிடிக்குமாம். இதை தனது சுயசரிதை புத்தகமான ஏ பிராமிஸ்டு லேண்ட் என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ராமாயணமும் மகாபாரதமும் கேட்டு வளர்ந்ததால் தனக்கு இந்தியா எப்போதும் சிறப்பம்சம் வாய்ந்த நாடாக இருந்துள்ளது என ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.இந்த புத்தகம் 768 பக்கங்களை கொண்டவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+