கணவர் ஒபாமாவுடன் ஒப்பீடு.. கமலா ஹாரிஸை நெகிழ வைத்த மிட்செல் ஒபாமா..மேடையில் நடந்த சுவாரசியம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் இறுதியின் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இந்நிலையில் தான் மிட்செல் ஒபாமா தனது தனது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை, தனது கணவர் பராக் ஒபாமாவுடன் ஒப்பிட்டு பேசியது நெகிழ வைத்தது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோபைடனின் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொடங்கி உள்ளனர். தற்போதைய சூழலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு என்பது பெருகி வருகிறது. கருத்து கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு சாதகமாக வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் பின்தங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் ஜனநாயக கட்சியின் 2 நாள் தேசிய மாநாடு அமெரிக்காவின் சிகோகோ நகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் இறுதியில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த மாநாட்டில் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிட்செல் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் உள்பட ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா கூறியதாவது: அமெரிக்கா மீதான நம்பிக்கை மீண்டும் வருகிறது. தற்போது ஏதோ அற்புதமான காற்று வீசுகிறது இல்லையா? உண்மையில் நான் இங்கு அதனை உணர்கிறேன். இந்த அற்புத காற்று நாடு முழுவதும் பரவி வருகிறது. உண்மையில் இது நம்பிக்கையின் சக்தியாக தெரிகிறது.
அமெரிக்க அதிபராக தகுதியான நபராக கமலா ஹாரிஸ் உள்ளார். கடந்த 2008 ல் என் கணவர் ஒபாமாவை(ஒபாமா 2008 முதல் 2016 வரை 2 முறை அதிபராக இருந்தார்) போல் அவருக்கு ஆதரவு உள்ளது. கமலா ஹாரிஸ் நம்மால் கணிக்க முடியாத அளவுக்கு நாட்டுக்காக உழைப்பை போட்டு வருகிறார். நாட்டுக்காக தொடர்ந்து தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வருகிறார்.
ஆனால் டொனால்ட் டிரம்ப் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
உலகத்தை பற்றி அவர் குறுகிய பார்வை கொண்டுள்ளார். மேலும் நன்கு படித்த மற்றும் கருப்பினத்தவர்களை சேர்ந்தவர்கள் தனக்கு அச்சுறுத்தலாக நினைக்கிறார். அவர் எப்போதெல்லாம் குறுகிய மனப்பான்மையுடன் யோசிக்கிறாரா? அப்போதெல்லாம் நாம் உயரத்துக்கு செல்லலாம்.
இப்போதும் கமலா ஹாரிஸ் இந்த நாட்டின் மீது தனது விசுவாசத்தை தொடர்ந்து காட்டி வருகிறார். யார் மீதும் கோபம் மற்றும் வெறுப்பை காட்டவில்லை. அனைவருக்குமான வாய்ப்பை அவர் உருவாக்கி வருகிறார். ஆனால் புலம்பெயர்ந்தோர் (மறைமுகமாக கருப்பு இனத்தவர்கள்)வேலைகளை திருடுவதாக கூறியுள்ளார். மேலும் ஒரு அமெரிக்கன் என்பதற்கு பிரத்யேக தகுதி, அதிகாரம் எதுவும் இல்லை'' என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications