எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பைடனுக்கு பதில் அதிபர் தேர்தலில் ஒபாமா மனைவி மிச்செல்? என்ன நடக்கிறது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு கடந்த வாரம் நடந்த விவாதத்தில் பைடன் மிக மோசமாகச் செயல்பட்டார். அந்த விவாதத்தில் டிரம்ப் தான் ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக இதில் பைடன் உடல்நிலை குறித்து நெகடிவ் தகவல்கள் பரவின. இதற்கிடையே அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறக்க ஜனநாயக கட்சியினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறும். அதன்படி கடந்த 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதற்கிடையே அங்கு இந்தாண்டு இறுதியில் மீண்டும் அதிபர் தேர்தல் நடக்கிறது.

அதிபர் தேர்தல்: அங்கு பொதுவாகவே ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் தான் செல்வாக்கு அதிகம். இரு கட்சிகளில் யாராவது ஒருவர் தான் அதிபராக வருவார்கள். இந்தாண்டு நவ. மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அவர்கள் நாடு முழுக்க தீவிர பிரச்சாரத்திலும் இறங்கிவிட்டனர்.
இதற்கிடையே கடந்த வாரம் பைடன் மற்றும் டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சியான சிஎன்என் சார்பில் இந்த விவாதம் நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த விவாதத்தில் டிரம்ப் கை தான் ஓங்கியது. பைடன் பல இடங்களில் திக்கித் திணறிப்போனார். கடந்த 4 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள், பொருளாதாரம் எந்தளவுக்கு முன்னேறி உள்ளது, புவிசார் அரசியலில் சாதித்தது உள்ளிட்டவற்றை எடுத்துக் கூற பைடன் தவறிவிட்டார்.
டிரம்ப்: அதேநேரம் மறுபுறம் டிரம்ப் வெளுத்து வாங்கிவிட்டார். பைடன் ஆட்சியில் அமெரிக்க அல்லாதவர்களுக்கே வேலை கிடைத்துள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதாகத் தெரிவித்தார். அதேபோல கடந்த முறை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவே அவர் கூறினார். இப்படிப் பல தலைப்புகளில் டிரம்ப் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. பைடனால் அதற்குப் பதிலடி தர முடியவில்லை.
81 வயதாகும் பைடன் வயது மூப்பு காரணமாகச் சிக்கல்களை எதிர்கொள்வதாகக் கூறப்பட்டது. இந்த விவாதத்தில் அது எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. பைடன் பல இடங்களில் திக்கித் திணறினார். டிரம்பிற்கு பதிலடி தர வேண்டிய இடங்களில் எல்லாம் பைடன் சொதப்பினார். விவாதத்தைப் பார்த்த அனைவருமே அதில் டிரம்ப் தான் வென்றதாகவே கூறினார். அந்தளவுக்கு பைடன் சொதப்பி இருந்தார்.
பைடனுக்கு சிக்கல்: இதற்கிடையே இந்த விவாதத்திற்குப் பிறகு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியினர் பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரைக் களமிறக்கத் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இது குறித்து அங்கொன்றும் இங்கு ஒன்றுமாகலே தகவல் வெளியான போதிலும் இப்போது தான் அந்த பேச்சு அதிகரித்துள்ளது. பைடன் வயது மூப்பு காரணமாக மன ரீதியாக ஃபிட்டாக இல்லை என்று கூறப்படும் நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
மிச்செல் ஒபாமா: பைடனுக்கு பதிலாக முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை தேர்தலில் களமிறக்க ஜனநாயக கட்சியினர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. டிரம்ப் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவருக்கு பைடனால் சரியான பதிலடி கொடுக்க முடியாது என்பதாலேயே இது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒபாமாவின் மனைவி மிச்செலுக்கு ஜனநாயக கட்சியிலும் சரி பொதுமக்களிடமும் சரி நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதன் காரணமாகவே அவரை களமிறக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இந்த நேரத்தில் பைடனை மாற்றினால் அதுவே தோல்வியை ஒப்புக் கொண்டது போல ஆகிவிடும். இதை எல்லாம் வைத்தே ஜனநாயக கட்சியினர் ஆலோசித்து வருகிறார்கள். இதனால் ஜனநாயக கட்சியினர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது சில காலத்தில் தெரிந்துவிடும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications