இனி 84 நாள் சூரியன் மறையவே மறையாது.. அமெரிக்காவின் வினோத நகரம்.. ‘மிட்நைட் சன்'.. அப்படினா என்ன?
வாஷிங்டன்: ஒரு நகரில் 84 நாட்கள் தொடர்ந்து பகலாவே இருக்கும். அங்கு இரவு என்பதே கிடையாது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நீங்கள் படித்தது தான் சரிதான். அமெரிக்காவின் அலாஸ்காவின் வடக்கு பகுதியில் உள்ள உட்கியாக்விக் நகரத்தில் தான் 'மிட்நைட் சன்' தொடங்கி உள்ளது. இந்த 'மிட்நைட் சன்' என்பது என்ன? எப்படி அந்த நகரில் மட்டும் 84 நாட்கள் தொடர்ந்து பகலாகவே இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்த நகரம் அமெரிக்காவின் அலாஸ்காவில் உட்கியக்விக் நகரத்தில்(Utqiagvik City) அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த 9 ம் தேதி கடைசியாக சூரிய அஸ்தமனம் நடந்தது. அதன்பிறகு மறுநாள் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.57 மணிக்கு சூரியன் உதித்தது. அன்று உதித்த சூரியன் இன்னும் மறையவில்லை.

இன்று மட்டுமில்லை. இந்த சூரியன் அடுத்த சில மாதங்களுக்கு மறையவே மறையாதாம். மொத்தமாக 84 நாட்கள் வரை சூரியன் அந்த நகரத்தின் வானை விட்டு மறையாது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வரை சூரியன் தொடர்ந்து இருக்கும். கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை உட்கியவிக் நகரில் பகல் நேரம் தான் இருக்கும்.
இதனால் உட்கியாக்விக் நகரில் இரவு என்பதே கிடையாது. 84 நாட்களும் தொடர்ந்து பகலாகவே இருக்கும். இந்த நிகழ்வின் பெயர் 'மிட்நைட் சன்' (Midnight Sun). அதாவது இரவு நேரத்திலும் தொடர்ந்து சூரியன் இருக்கும் என்பதால் இப்படி பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு இப்படி 84 நாட்கள் சூரியன் மறையாமல் இருப்பது போல் குளிர்காலத்தில் நீண்ட நாட்கள் சூரியன் உதயம் என்பது இருக்காது. இதனால் நகர் முழுவதும் இரவில் மூழ்கியிருக்கும் அதனை "போலார் நைட்" (Polar Night) என்பார்கள். இந்த காலத்தில் 65 நாட்கள் நகரில் சூரியன் என்பது இருக்காது. இதனால் அந்த 65 நாட்களும் முழு இரவாகவே இருக்கும்.
உட்கியவிக் நகரில் இப்படியான வினோத மாற்றத்துக்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று சூரியனை, பூமி நீள்வட்டப்பாதையில் சுற்றி வருவது. இன்னொன்று பூமி 23.5 டிகிரி கோணம் சாய்ந்த நிலையில் தன்னை தானே சுற்றி வருவது.
பூமி தன்னை தானே சுற்றி கொள்வதால் பகல் மற்றுமு் இரவு மாறி மாறி வருகிறது. பூமி தன்னுடன் அச்சில் சுழலும்போதும் சூரியனை நோக்கியுள்ள பகுதி பகலாகவும், சூரியனுக்கு எதிரே உள்ள பகுதி இரவாகவும் இருக்கும். இதனால் தான் நம் நாட்டில் பகலாக இருக்கும்போது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அது இரவு நேரமாக இருக்கும்.
அதோடு நம்முடைய பூமி 23.5 டிகிரி கோணத்தில் சாய்ந்து தன்னை தானே சுழல்கிறது. இதனால் பகல் மற்றும் இரவு மாறி மாறி வருகிறது. மேலும் சூரியனையும் பூமி நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது. இதனால் பகல், இரவு நேரங்களின் நீளங்கள் மாறுபடுகிறது.
அந்த வகையில் இந்த நகரம் ஆர்க்டிக் வட்டத்திற்கு (Arctic Circle) வடக்கே அமைந்துள்ளது. இங்கு கோடை காலத்தில் சூரியன் முழுவதுமாக மறைவது இல்லை. இதனால் 84 நாட்கள் பகலாக இருக்கிறத. இங்கு இந்த மாற்றம் நடப்பது இதுதான் முதல் முறையல்ல. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்த நகரில் 84 நாட்கள் வரை பகல் மட்டுமே இருக்கும்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications