டிரம்பை கண்டு பயமா? அமெரிக்க அதிபர் தேர்தலில் டுவிஸ்ட்! பேக் அடித்த முன்னாள் துணை அதிபர் பென்ஸ்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்து உள்ளார்.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சி அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.

வரும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிபர் ஜோ பைடனும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார். மறுபக்கம் டொனால்டு டிரம்பும் இதில் போட்டியிட உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். அதேபோல், டொனால்ட் டிரம்பின் ரிபப்ளிக் கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் பலர் இறங்கி இருக்கின்றனர்.
டொனால்டு டிரம்பை தவிர்த்து நிக்கி ஹாலே, அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், டிம் ஸ்காட், ரான் டி சாண்டிஸ், அர்கன்சாஸ் முன்னாள் ஆளுநர் அசா ஹட்சின்சன், வலதுசாரி ரேடியோ பிரபலம் லாரி எல்டர், தொழிலதிபரும், இந்திய வம்சாவளியுமான விவேக் ராமசாமி உள்ளிட்டோர் பெயர்களும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் உள்ளன. ஆனால், டொனால்டு டிரம்பே அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு போட்டியாக பார்க்கப்பட்டவர் மைக் பென்ஸ். டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டவர்தான் இந்த பென்ஸ். 63 வயதான மைக் பென்ஸ், டொனால்ட் டிரம்பின் நம்பிக்கைக்குரிய கரமாக இருந்தவர். கடந்த 2021 ஆம் ஆண்டு டிரம்பின் ஆதரவாளர்கள் கும்பலாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் முன் நிகழ்த்திய தாக்குதலின்போது அவர்கள் மைக் பென்ஸுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரேடியோ ஜாக்கியாக இருந்த மைக் பென்ஸ், அமெரிக்காவின் குரலாக மாறுவாரா? என்ற பேச்சு இருந்து வந்த நிலையில் திடீரென அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேப்டாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார் மைக் பென்ஸ். அமெரிக்காவின் லாஸ் வேகாசில் குடியரசுக் கட்சியின் யூத கூட்டணி கூட்டத்தில் பேசிய அவர், "தொடர் பிரார்த்தனை மற்றும் ஆலோசனைக்கு பிறகே என்னுடைய பிரச்சாரத்தை இன்றுடன் நிறுத்த முடிவு செய்து இருக்கிறேன். இது எனக்கு தெளிவாகி இருக்கிறது." என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications