கோலாகலமாக நடந்த மினசோட்டாத் தமிழ்ச் சங்க பேரவை விழா! பழந்தமிழர் கலைகளால், களைகட்டிய அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவின் மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பேரவை விழா கோலாகலமாக நடந்தது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை (FeTNA) ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க சுதந்திர தின நாளான ஜூலை 4 ஆம் தேதியை ஒட்டி வரும் நாட்களில், பேரவைத் தமிழ் விழாவை, வட அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது.

இவ்விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும், சிறப்பு விருந்தினர்கள், தமிழ் அறிஞர்கள், இலக்கிய படைப்பாளிகள், திரை நட்சத்திரங்கள் என்று பல்வேறு கலைஞர்கள், பல்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோர்களும் கலந்து கொள்வார்கள். இங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுடன் கலை நிகழ்ச்சிகளிலும், குழந்தைகளுக்கான போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள்.
38 ஆவது பேரவை விழா
இந்த 2025 ஆம் ஆண்டு, ஜூலை 3,4,5 தேதிகளில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையானது வடகரோலினாத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து, பேரவைத் தமிழ் விழாவை, இராலே நகரில் மிகச் சிறப்பாக நடத்தியது. இந்த 38 ஆம் ஆண்டிற்கான பேரவை விழாவில், சுமார் 30 இக்கும் அதிகமானவர்களுடன் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து கலந்து கொண்டார்கள்.
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை நடத்தும் பேரவை விழா மேடையில் பல கலை நிகழ்ச்சிகளை மேடையேற்றி வருகிறது.
மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் பேரவை விழா மேடையேற்றங்கள்
2013 டொராண்டோ, கனடா - தீரன் சின்னமலை - வில்லுப்பாட்டு
2014 செயிண்ட் லூயிஸ், மிசெளரி - "சிலம்பின் கதை" - தெருக்கூத்து
2015 சான் உசே, கலிஃபோர்னியா - பொய்க்கால் குதிரையாட்டம்
2016 நியூஜெர்சி - கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம்
2017 மினியாபோலிஸ், மினசோட்டா - "மருதநாயகம்" நாடகம்
2019 சிகாகோ இல்லினாய் - "குரலற்றவர்களின் குரல்" கீழ்வெண்மணி படுகொலைகள் பற்றிய இசை நாடகம்
2023 நியூயார்க் - "பாரிவள்ளல்" - தெருக்கூத்து
இவையனைத்தும் நேரலையாக பதிவு இல்லாமல் பேசி நடித்த நிகழ்வுகள்.
பாடல்களும், இசையும் முழுமையாக மினசோட்டாத் தமிழ்ச்சங்கமே உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
நாடகம்
பழந்தமிழ் செவ்வியல் கலைகள் - மரபுக் கலைகளும் செவ்வியலே என்ற தலைப்பில் நாடகமாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மேடையேற்றியது. இந்த நாடக வடிவமானது, முதல் முறையாக தமிழர் ஆடற்கலைகளை ஒப்பீடு செய்து, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.
இதில் பழந்தமிழர்க் கலைகளில் ஒன்றான சதிராட்டத்தில் இருந்து தோன்றியது தான் பரதம் என்றும், அதற்கான சான்றுகளுடன் சொல்லப்பட்டிருந்தது. மேலும் பரத நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் அடைவுகளுடன், பறை அடைவுகள் எப்படி ஒன்றாக இருக்கிறது என்பதையும் விளக்கிக் காட்டியது.
அது மட்டும் அல்லாமல் ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்ட ஆட்டங்கள் எப்படி பறை மற்றும் பரத அடைவுகளுடன் ஒன்றாக இருக்கிறது என்பதை ஒரே மேடையில் ஆடிக் காட்டினர்.
பழந்தமிழர் கலைகள் அனைத்தும் சமமானதே, ஒன்றுக்கொன்று உயர்ந்தது, தாழ்ந்தது என்றில்லாமல் அனைத்தும் போற்றப் படக்கூடியதே என்ற மைக்கருவுடன் நிறைவு பெற்றது. இந்த நாடகமானது அனைவரின் பாராட்டையும் பெற்ற வகையில், ரசித்த அனைவரும் எழுந்து நின்று, நீண்ட நேரம் கைத்தட்டலையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்த நாடகத்தில் ஒப்படைவுகள் ஆடிக்காட்டியவர்கள், மினசோட்டாவிற்கு வந்திருந்த ஆசான்களான இராசா, பாவேந்தன் அவர்களிடம் இருந்து கற்றுத் தேர்ந்தவைகளே. இந்த நாடகத்தில் பயன்படுத்தப் பட்ட பறை இசை பத்ம ஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான், தவில் தஞ்சாவூர் நாகராஜ் கருப்பையா, நாயனம் இரவிச்சந்திரன், மகுடப்பறை திரு.சங்கர்கணேஷ். இந்த நாடக மேடையேற்றத்திற்காக பங்கேற்ற அனைவரும் கடந்த 4 வாரங்களாக கடும் பயிற்சி எடுத்திருந்தனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications