மீனவரை லபக்கென விழுங்கிய திமிங்கலம்.வாய்க்குள் இருந்த திக் திக் விநாடிகள்.பின்பு நடந்ததுதான் அதிசயம்
வாஷிங்டன்: இந்த உலகில் மனித உயிர்கள் மிகவும் மதிப்பு மிக்கது. ஒருவரின் உயிர் பிரிந்து விட்டால் சக மனிதர்கள் படும் துன்பத்தை வெறும் வார்த்தையால் சொல்லி விட முடியாது.
ஆனால் மனிதனின் உயிர் போவது என்பது அவனின் கையில் இல்லை. எல்லாவற்றுக்கும் நேரம் என்று ஒன்று இருக்கிறது.

மதிப்புமிக்க உயிர்
''மலையில் இருந்து விழுந்து உயிர் பிழைத்தவனும் இருக்கிறான். படிக்கட்டில் தவறி விழுந்து உயிர் போனவனும் இருக்கிறான்'' என்று விளையாட்டாக சொல்வார்கள். இந்த வாக்கியத்தை நிரூபிக்கும் வகையில் உண்மையிலேயே மரணத்தின் வாயில் உள்ளே சென்று விட்டு ஒருவர் தப்பி வந்துள்ளார். இந்த சம்பவம் அரங்கேறியது எங்கே? வாங்க பார்ப்போம்.

அமெரிக்க மீனவர்
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கல் பேக்கார்ட். மீனவரான இவர் சுமார் 40 ஆண்டுகளாக கடலில் நீந்தி சென்று லாப்ஸ்ட்டர் எனும் ராட்சத இறால்களை பிடிக்கும் தொழில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 11-ம் தேதி வழக்கம்போல் 45 அடி ஆழத்தில் கடலில் நீந்தி சென்று லாப்ஸ்ட்டர் இறால்களை வேட்டையாடி கொண்டிருந்தார் மீனவர் மைக்கல் பேக்கார்ட்.

விழுங்கிய திமிங்கலம்
அப்போது திடீரென வந்த திமிங்கலம் ஒன்று லபக்கென்று மைக்கல் பேக்கார்ட்டை விழுங்கி விட்டது. அவருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. முதலில் தான் அநியாயமாக சுறாவுக்கு இரையாகி விட்டதாக நினைத்தார். அதன்பின்புதான் தான் திமிங்கலத்தால் விழுங்கப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. ஆனால் அடுத்த நடந்த சம்பவம்தான் மிகவும் அதிசயமாகும்.

நடந்த அதிசயம்
சுமார் 30 விநாடிகள் கழித்து திமிங்கலம் மைக்கல் பேக்கார்ட்டை வெளியில் துப்பியது. மேற்பரப்பில் படகில் இருந்த குழுவினர் மைக்கல் பேக்கார்ட்டை உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர். கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்று விட்டு திரும்பிய மீனவர் மைக்கல் பேக்கார்ட் இது பற்றி படபடப்புடன் கூறியதாவது:-

நம்ப முடியவில்லை
முதலில் சுறா விழுங்கியதாகத்தான் நினைத்தேன். ஆனால் சுற்றிலும் பற்கள் இல்லாததால் திமிங்கலத்தின் வாயில் இருப்பதை உணர்ந்து கொண்டேன். சுற்றிலும் இருள் சூழ்ந்து இருந்தது. கண்டிப்பாக இறந்து விடுவோம் என்று நினைத்தேன். அப்போது நினைவுகள் எனது மனைவி, குழந்தைகளை நோக்கி சென்றது. ஆனால் இறைவன் வந்து என்னை காப்பாற்றி விட்டார். என்னால் இதை நம்பவே முடியவில்லை என்று மைக்கல் பேக்கார்ட் கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications