காணாமல் போன ஓனர்.. ஆடைகளுடன் கடித்துத் தின்ற 18 நாய்கள்.. அமெரிக்காவில் திகில் சம்பவம்
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காணாமல் போன நபரை 18 நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு டெக்சாஸ் மாகாணம் ஜான்சன் கவுன்ட்டியை சேர்ந்தவர் பிரட்டி மேக் (57). இவர் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து இவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் மேக் குறித்து அவரது நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கால் தடங்கள்
இந்த நிலையில் போலீஸார் வீனஸ் என்ற பகுதிக்கு வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக சென்றிருந்தனர். அப்போது அங்கு மனிதனின் எலும்புத் துண்டுகள் சிதறியிருந்தன. அதில் நாயின் முடிகளும் அருகே கால் தடங்களும் கிடைத்தன.

எலும்புத் துண்டுகள்
பின்னர் கிழிந்த சில ஆடை துண்டுகளும் இருந்தது. இதனால் போலீஸார் சந்தேகம் அடைந்து அந்த எலும்புத் துண்டுகளை சேகரித்து விசாரித்து வந்தனர். இது காணாமல் போன பிரட்டி மேக்கின் எலும்புத் துண்டுகள் என தெரியவந்தது.

18 நாய்கள்
மேக், அவருக்கு சொந்தமான வீனஸ் பகுதிக்கு அருகே ஒரு சிறிய கிராமப்புற வீட்டில் வசித்து வந்தார். அங்கு 18 நாய்களை வளர்த்து வந்தார். மேக் எங்கு சென்றாலும் தன்னுடன் அந்த 18 நாய்களையும் அழைத்து செல்வது வழக்கம்.

மனித முடிகள்
அவற்றுடன் எப்போதும் மேக் பிரியமாகவே இருந்து வந்துள்ளார். குடும்பத்தினரை காட்டிலும் அந்த நாய்களுடனேயே பொழுதை கழித்து வந்துள்ளார். இந்த நிலையில் நாய்களின் மலத்தில் மனித முடிகளும், ஆடை துண்டுகளும் இருந்தது.

காரியம்
இதையடுத்து அந்த ஆடைத் துண்டுகளும், வீனஸ் பகுதியில் போலீஸாருக்கு கிடைத்த துண்டுகளும் ஒன்று என தெரியவந்தது. இந்த நிலையில் 18 நாய்களும் சேர்ந்து மேக்கை கடித்து தின்றது தெரியவந்தது. அதில் 15 நாய்களுக்கு வெறி பிடித்துவிட்டதால் அவை இந்த காரியத்தை செய்துள்ளன.

நல்ல நிலையில் 3 நாய்கள்
15 நாய்களில் இரு நாய்களை மற்ற 13 நாய்கள் தின்று விட்டன. மீதமுள்ள 13 நாய்களும் மாவட்ட நிர்வாகத்தால் கொல்லப்பட்டன. இந்த நிலையில் மற்ற 3 நாய்கள் தற்போது இயல்பான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மனிதனின் சிறு சிறு உடல்பாகங்களை நாய்கள் உண்ணும். ஆனால் இங்கு முழு மனித உடலையே அதுவும் ஆடைகளுடன் தின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications