இதுதான் தாய்மை.. 63 நாள் பால் சுரந்து பாலகர்களுக்கு கொடுத்த சியரா.. குவியும் பாராட்டுகள்!
குழந்தை இறந்ததும் தாய் செய்த அதிர்ச்சிகர காரியம் பாராட்டை பெற்று வருகிறது
Recommended Video
வாஷிங்டன்: உலகத்தில் எந்த பெண்ணும் செய்யாத காரியத்தை செய்ய துணிந்துள்ளார் இந்த பெண்.. இந்த தாயின் செயல் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் தந்து வருகிறது.
அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தை சேர்ந்தவர் சியரா ஸ்ட்ராங்ஃபீல்ட். சில வருஷங்களுக்கு முன்பு கல்யாணமாகி இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில், 2-வது முறையாக சியரா கர்ப்பம் தரித்தார்.
ஆனால், அந்த ஆண் குழந்தை ட்ரைசோம் 18 என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டது. பொதுவாக, ஒருவருக்கு 2 ஜோடி என மொத்தம் 23 குரோமோசோம்கள் இருக்கும். ஆனால், ட்ரைசோம் 18 வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 18வது ஜோடி குரோமோசோம் மூன்றாக இருக்கும். இது மிகவும் அரிது.. அதனால், உடல் உறுப்புகள் எல்லாமே சிதைந்து போகும் அபாயம் ஏற்படலாம்.

ஆபத்து
சியராவின் குழந்தை சாமுவேலுக்கு இந்த நோய் இருப்பது கருவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை பிறந்தால் ஆபத்துதான் என்று டாக்டர்கள் சியராவுக்கு சொல்லி விட்டனர். அதனால், எப்படியும், இந்த குழந்தை பிறந்தால்உயிரிழக்கலாம் என்று சியராவுக்கு தெரியும்.

குறை பிரசவம்
இதன்பிறகுதான், உடனே ஆபரேஷன் செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றி விட்டனர். போன செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சியராவுக்கு ஆபரேஷன் நடந்தது.. 8 மாசத்திலேயே குழந்தை பிறந்தான்.. ஆனால், சாமுவேலின் உடலிலிருந்த ட்ரைசோம் 18 நோயை டாக்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

சியாரா
உடல் உறுப்புகள் அவனுக்கு வரளவே இல்லை.. குழந்தை இறந்துவிடும் என்பது முன்னமேயே சியாராவுக்கு தெரிந்தாலும், அந்த குழந்தை பிறந்ததும் அதை பார்த்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அந்த நேரத்தில்தான் தன் குழந்தைக்கு சாமுவேல்என்று பெயர் வைத்தார். ஆனால், வெறும் 3 மணி நேரம்தான்.. அவன் இறந்துவிட்டான்.

இறந்துவிட்டான்
பிஞ்சு இறந்ததுமே கலங்கி அழுதார் சியரா.. அந்த சமயம் சாமுவேலுக்காக தாய்ப்பால் சியராவுக்கு சுரந்தது... அந்த தாய்ப்பாலை பிற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தானமாக வழங்க முடிவு செய்தார் சியரா.. மகனுக்காக சுரக்கும் அந்த தாய்ப்பாலை 2 மாதமாக சேமித்து வைத்தார்.. முதன்முதலில் குழந்தை இந்த தேதியில் பிறக்கும் என்று குறித்து கொடுத்த நாளில், சேகரித்த தன் தாய்ப்பாலை NICU milk banks க்கு முதலும் , கடைசியுமாக தானமாக வழங்குகிறேன்" என்று சொல்லி தானமாக அளித்தார்.

தாய்ப்பால்
"ஒரு தாய் தன் குழந்தைக்கு பால் ஊட்டுவது போல சிறந்த உணர்வு எதுவுமே இருக்க முடியாது.. என் சாமுவேல் பிறந்தபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டேன்.. ஆனால், அவன் இறந்துவிடுவான், என்னால் பால் கொடுக்க முடியாது என்று நினைத்து கலங்கினேன். அவனை எப்படியாவது காப்பாற்றிடலாம்னு ஒரு ஓரமா எண்ணம் இருந்தது.. ஆனால் முடியவில்லை.. அவனுக்காக சுரந்த தாய்ப்பாலை சாமுவேல் பிறப்பதற்கு முன்னமேயே நான் முடிவு செய்துட்டேன்.

நடுராத்திரி
என்னுடைய இந்த தாய்ப்பால் பல குழந்தைகளை காப்பாற்றும்.. நடுராத்திரிகூட எழுந்து என் தாய்ப்பாலை சேகரித்து வைக்கிறேன்.. இது எனக்கும் சாமுவேலுக்கும் ஓர் இணைப்பை தந்துள்ளது.. எனக்கு தெரியும், என் மகன் எப்பவும் என்கூடவே இருப்பான்" என்று பூரித்து போய் சொல்கிறார் சியரா. சியராவின் இந்த செயலை கண்டு உலக மக்கள் திகைத்து போய் உள்ளனர்.. பலரும் சியராவுக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.. தாய்மைக்கு ஏது ஈடு இணை.. தாய்ப்பாலுக்கு நிகர் உலகில் உண்டோ!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications