ஆஹா.. சட்டென மாறிடுச்சே.. டிரம்பிற்கு எகிறிய ஆதரவு.. அப்போ கமலா ஹாரிஸ் நிலை? திடீர் மாற்றம் ஏன்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இதில் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது வெளியாகியுள்ள சர்வேயில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கமலா ஹாரிஸை விட டிரம்பிற்கு பல மடங்கு ஆதரவு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேநேரம் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

ஆதரவு அதிகம்: இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், கமலா ஹாரிஸ் கை சற்று ஓங்கி உள்ளது.. கடந்த வாரம் இருவருக்கும் இடையே நடந்த விவாதத்திற்குப் பிறகு நடந்த சர்வேயில் கூட கமலா ஹாரிஸுக்கான ஆதரவே அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான சுவாரசிய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் கமலா ஹாரிஸை காட்டிலும் டிரம்பிற்கான ஆதரவு அதிகமாகவே இருக்கிறது.
அதாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக டிரம்ப் பேசி வரும் நிலையில், அதற்கு அமெரிக்க மக்களிடையே நல்ல ஆதரவு இருக்கிறதாம். இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் கமலா ஹாரிஸை விட டிரம்பிற்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டிரம்ப் சொல்வது என்ன: இரு தரப்பும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதியளித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% இறக்குமதி வரி விதிக்கப்படும் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு சுமார் 56% மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
மேலும், டிரம்ப் ஒருபடி மேலே போய் அமெரிக்காவின் $35 டிரில்லியன் கடனைக் குறைப்பேன் உறுதியளித்துள்ளார். இதற்கான ஆதரவும் அதிகமாகவே இருக்கிறது. நாட்டின் கடனை குறைக்க எடுக்கப்படும் உடனடி நடவடிக்கைகள் அபாயகரமாகவே இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறினாலும், இது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதே உண்மை.
சாதகம்: மேலும், பைடன் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடுகையில் டிரம்ப் அதிபராக இருந்த போது பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருந்துள்ளது. மளிகை பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அன்றாடப் பொருட்களின் விலைகள் டிரம்ப் ஆட்சியில் குறைவாக இருக்கும் என 43% பேர் கூறியுள்ளனர். அதேநேரம் சுமார் 36% பேர் மட்டுமே இந்த விவகாரத்தில் கமலா ஹாரிஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
கமலா ஹாரிஸ்: அதேநேரம் யாருடைய ஆட்சியில் மிடில் கிளாஸ் மக்களுக்கான பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்ற கேள்விக்கு டிரம்பை விடக் கமலா ஹாரிஸுக்கே ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதில் 43% கமலா ஹாரிஸுக்கு ஆதரவளித்துள்ளனர். மேலும், அனைவரும் அணுகக்கூடிய விலையில் சுகாதார சேவைகளை வழங்குவது மற்றும் பாலங்கள், சாலைகளை அமைப்பதற்குக் கமலா ஹாரிஸ் சிறப்பாக இருப்பார் என மக்கள் கூறியுள்ளனர்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications