உலகையே உலுக்கிய தாய் பறவை தன் குஞ்சுக்கு உணவளிக்கும் புகைப்படம்.. அப்படியென்ன இருக்கு இதில்?
வாஷிங்டன்: தாய்ப் பறவை ஒன்று தன் குஞ்சுக்கு உணவளிக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது நெஞ்சே வெடித்து விடும் அளவிற்கு இருக்கிறது.
வாயை திறந்து பேசினால்தான் நமது கருத்தையும் எண்ணத்தையும் வெளிப்படுத்த முடியும் என்பதில்லை. ஓவியங்களினாலும், புகைப்படங்களினாலும் நாம் பேசலாம்.
இது போன்ற புகைப்படங்கள் மூலம் நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துக்களையும் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

புகைப்பட கலைஞர்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடற்கரையில் பல அழகான பறவைகள் பறப்பது வழக்கம். இந்த பறவைகளை புகைப்படம் எடுப்பதற்காக கடந்த வாரம் புகைப்பட கலைஞர் கரேன் மேசன் என்பவர் சென்றிருந்தார்.

புகைப்படம்
அப்போது பறவைகளின் அசைவுகளை வித்தியாசமாக படம் பிடித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் பிளாக் ஸ்கிம்மர் எனும் பறவை தனது குஞ்சுக்கு உணவை எடுத்து கொண்டு சென்றது. அப்போது குட்டிப் பறவைக்கு தாய் பறவை ஊட்டுவது போன்ற புகைப்படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் என கரேன் நினைத்தார்.

மனவருத்தம்
பின்னர் அருகில் கேமராவை வைத்து விட்டு காத்துக் கொண்டிருந்தார். தாய் பறவையும் குஞ்சுக்கும் உணவை அளித்தது. அதை புகைப்படமாக எடுத்த கரேன், சரியாக வந்துள்ளதாக என சரிபார்த்தார். அப்போது அந்த படத்தை பார்த்த அவரது மனம் வருத்தப்பட்டது.
காரியங்கள்
தாய் பறவை, தனது குஞ்சு உணவு என கொடுத்தது உணவல்ல, நஞ்சு, அதாவது சிகரெட்டின் மீதமுள்ள துண்டை உணவாக கொடுத்தது. இதையடுத்து கரேன் தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த படத்தை போட்டு இது போல் யாரும் அலட்சியமான காரியங்களை செய்யாதீர்.

கேடு
ஒரு சிலர் செய்யும் காரியங்களால் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன என உருக்கமாக தெரிவித்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மனிதர்கள் பிடிக்கும் சிகரெட்டுகளால் அவர்களுக்கு மட்டும் கேடு விளையாமல் பறவைகள், விலங்குகளுக்கும் கேடு விளைகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications